Sunday, October 30, 2011

சிவாலயப் புனர்நிர்மாணப்பணியில் பங்கு பெறுவோமா?







திருபுவனத்திலிருந்து நரிக்குடி செல்லும் வழியில் 15 வது கிலோமீட்டர் தூரத்தில் கல்விமடை என்ற கிராமம் இருக்கிறது.இந்தக் கிராமம் விருதுநகர் மாவட்டத்தின் எல்லையில், திருச்சுழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது.இந்த கல்விமடைகிராமத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே அருள்மிகு கண்திறந்த நாகேஸ்வரமுடையார் அவர்களும்,அருள்மிகு நாகேஸ்வரி தாயாரும் கடந்த 5,000 ஆண்டுகளாக அருள்புரிந்துவருகின்றனர்.

கோவிலுக்குள்ளே நாக விநாயகர்,கண் திறந்த நாகேஸ்வரமுடையார் சிவனாக கிழக்கு நோக்கி அருள்பாலித்திருக்க,தெற்கு நோக்கியவாறு நாகேஸ்வரி தாயார் அருள்புரிந்துவருகிறாள்.பகலில் நாகேஸ்வரி தாயாரின் கண்கள் ஜொலிக்கிறது.(மதுரை,பரமக்குடி,அருப்புக்கோட்டை,திருச்சுழி,காரியப்பட்டி,நரிக்குடி மக்கள் பலர் சொன்னது.நீங்களும் ஒருமுறை போய் தரிசித்து,வரம் வாங்கி வாருங்கள்;அப்போதுதான் புரியும்!!!)

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,இந்த நாகேஸ்வரமுடையார்(சிவபெருமான்) ஒரு அதிசயம் நிகழ்த்தியிருக்கிறார்.இவரது கண்கள் பளிச்செனத் தெரிந்தது.தற்போதும் மாலை  6 மணிக்கு மேல் 8 மணி வரையிலும் இவரை வழிபடச் சென்றவர்கள்,சிவபெருமானின் முகத்தை தரித்துவருகின்றனர்.அடிக்கடி பேருந்து வசதியில்லாத உள்ளடங்கிய கிராமத்தில் இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. தமிழக அரசின் நிரந்தரமாக ஒருகால பூசைத் திட்டத்தின் கீழ் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது.
மூலவரைப் பார்த்தால்,மனது ரொம்பவும் வலிக்கிறது.ஆமாம்,இப்போதுதான் அடிப்படைக் கட்டுமானங்கள் இந்தக் கோவிலுக்கு உருவாகிவருகின்றன.ஒரு நாளுக்கு ஓரிரு பக்தர்கள் மட்டுமே கேள்விப்பட்டு வருகின்றனர்.சிவாலயத்துக்கு திருப்பணிகள் செய்ய விரும்புவோர் ஆன்மீகக்கடலைத் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.
ஓம்சிவசிவஓம்



No comments:

Post a Comment