Monday, October 24, 2011

சமுதாயத்தை அசுத்தமாக்கிய சட்டம்



அந்தக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பட்டிருந்தார்கள்.இப்படியிருந்த சூழ்நிலையில் திருப்பதி வெங்கடாஜலபதிகோவிலுக்குள் ஒரு ஹரிஜன் ஆண்டவனை தரிசிக்க நுழைந்திவிட்டார்.
அன்றைய சென்னை பிரசிடன்ஸி மாநில அரசு அவர் மீது வழக்கு தொடர்ந்தது.இந்த ஹரிஜன் சகோதரருக்காக நீதிமன்றத்தில் வாதாட ராஜாஜி முன்வந்தார்.
“ஹரிஜன் ஆலயத்திற்குள் நுழைந்ததால் ஆலயம் அசுத்தமாக்கப்பட்டது” இதுதான் போலீஸின் வாதம்.
வழக்கு விசாரணைக்கு வந்தது. “ஹரிஜன் கோவிலுக்குள் நுழைந்தபோது குளித்துவிட்டு வந்தாரா?” என்று போலீஸ் தரப்பு சாட்சியிடம் ராஜாஜி கேட்டார்.
“ஆமாம்;குளத்தில் மூழ்கிக் குளித்துவிட்டுத் தான் வந்தார்”என்றார் போலீஸ்தரப்பு சாட்சி.
“வெற்றுடம்புடன் வந்தாரா அல்லது. . .”
“வெறும் உடம்போடுதான்”
“வெறும் உடம்பு என்றால். . .மதச்சின்னங்கள் எதுவும் அவர் நெற்றியில் உடலில் இல்லையா?”
“தாரளமாக இருந்தன.பட்டை பட்டையாக நாமங்களை உடம்பெங்கும் போட்டுக்கொண்டு இருந்தார்”
“ஓஹோ! கோவிலை அசுத்தமாக்குவது  இப்படித்தானோ?”என்று ராஜாஜி மடக்கவே,வழக்கு தள்ளுபடி ஆனது.
‘பண்பாட்டின் அடிச்சுவடு’
நன்றி:விஜயபாரதம் தீபாவளிமலர்,புத்தகம்1,பக்கம்103,28.10.11

No comments:

Post a Comment