Tuesday, October 26, 2010

அன்னதானத்தின் சிறப்புகளை விளக்குகிறார் ஐயா பி.எஸ்.பி.அவர்கள்

ஏன் அன்னதானம் செய்ய வேண்டும்?

நமது பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டி இறைவனடி சேர்ந்த நாளை நினைவு கூறும் வகையில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மாத தோறும் அன்னதானம் செய்ய வேண்டும்.அன்னதானம் மறைந்தவர்களின் திதி அல்லது மறைந்த நட்சத்திரத்தன்று செய்துவரவேண்டும்.அது இயலாதவர்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்துவருவது மிக அவசியம்.

அப்படி அன்னதானம் செய்யும்போது, “இந்த அன்னதானத்தினால் ஏற்பட்ட புண்ணியமானது எனது பித்ருக்களுடைய ஆன்மாவை அடையட்டும்” என்று மனதிற்குள் மூன்றுமுறை சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.

இப்படி அடிக்கடி நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்துவருவதால்,இப்பிறவியில் எதிர்காலத்தில் நம்மையறியாமல் வரவிருக்கும் கஷ்டங்கள்,அவமானங்கள்,நோய்கள்,விபத்துக்கள்,பிரச்னைகள் வராது;அல்லது பெருமளவு குறைந்துவிடும்.வரவேண்டிய யோகங்கள் அதிகரிக்கும்.

மறுபிறவியில் இப்பிறவியை விட உயர்ந்த பிறப்பு அமையும்.சில கடுமையான கர்மாக்கள் தீரும்.

ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டும்.வீடு வாசல் இல்லாத முன்பின் தெரியாத அனாதைகள்,வயதானவர்களுக்குச் செய்வதே முறையான அன்னதானம் ஆகும்.
நன்றி:பி.எஸ்.பி.ஐயா அவர்கள்,பக்கம் 23,விடியல் மாத இதழ் மார்ச் 2009
.

No comments:

Post a Comment