Wednesday, October 13, 2010

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஜெர்மனியின் ஆராய்ச்சிமுடிவுகள்

இந்துதர்மத்தில் ஒளிந்திருக்கும் விஞ்ஞானம்:ஜெர்மனியர்களின் ஆராய்ச்சி முடிவு

சவுந்தர்ய லஹரி என்ற ஒரு பாடல் தொகுப்பு இருக்கின்றது.அதை ஆதிசங்கரர் திருக்கையிலாய மலைக்குச் சென்று சிவபெருமானிடமிருந்து வாங்கி வந்தார்.அதில் “தனுர் பவுஷ்பம் மெளர்வி” என்கிற சுலோகத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்தால் அம்பாளுடைய தரிசனம் ஏதாவது ஒன்று நமது கண்களுக்குத் தெரியும்.

ஒரு ஜெர்மனியன் இதை டெஸ்ட் பண்ணிவிட நினைத்தான்.அவனுக்கு இந்த தனுர் பவுஷ்பம் மெளர்வி என்பதை உச்சரிக்க முடியலை.அதனால்,அவன் ஒரு காரியம் செய்தான்;இந்த சவுந்தர்ய லஹரி வரியை 10 டேப் ரெக்கார்டரில் ரெக்கார்டு செய்து தொடர்ந்து ஒரு லட்சம் தடவை சொல்வது போல் செய்தான்.ஒரு லட்சம் தடவை அந்த டேப்ரிக்கார்டர் சொன்னதும் அந்த டேப்ரிக்கார்டர்கள் பத்தி எரிந்தன;அதில் அம்பாளுடைய வடிவம் வந்தது.இதை நாமும் முயற்சி செய்து பார்க்கலாமே!!!

கேரளாவில் 2000 வாக்க்கில் ஒரு புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர்.இருப்பதிலேயே தலைசிறந்த வேத விற்பன்னர்களை அழைத்துவந்து,யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ அனைவரும் வந்து இந்த யாகத்தில் கலந்துகொள்ளுங்கள் என அழைத்தார்கள்.

யாருக்கெல்லாம் குழந்தையில்லையோ,அவர்களுக்கு எந்தக் காரணத்தினால் குழந்தையில்லை என்ற மெடிக்கல் ரிப்போர்ட்களை எடுத்தார்கள்.அதற்கேற்றாற்போல், குழந்தையில்லாத தம்பதிகள் 48 நாட்கள் இந்த புத்திரகாமேஷ்டியாகத்தில் கலந்துகொள்ள வேண்டும்.அந்த 48 நாட்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம் இலவசமாக அந்த தம்பதிகளுக்குத் தந்தார்கள்.ஒரு ஜெர்மன் ஆய்வுக்குழு இந்தச் செலவுகளை ஏற்றுக்கொண்டனர்.

புத்திரகாமேஷ்டியாகம் முடிந்து சில வருடங்கள் கழிந்தப்பின்னர்,ஒரு சர்வே எடுத்தார்கள்.இந்த யாகத்தில் கலந்துகொண்ட தம்பதிகளில் 100க்கு 90 பேருக்கு ஆன்மீகபூர்வமாக அவர்களுக்கு குழந்தை பிறந்திருந்தன.
சொன்னவர்:சிவசங்கரபாபா,வெளியீடு:பக்கம் 49,ஜோதிடபூமி,அக்டோபர் 2010.

2 comments:

  1. அற்புதமான தகவல். இது போன்ற தகவல்களை பதிவு செய்யுங்கள். அதிசயம் நிறைந்த தரிசிக்க வேண்டிய கோவில்கள் பற்றிய செய்திகளையும் பதிவு செய்யுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  2. “தனுர் பவுஷ்பம் மெளர்வி” .please tell the full mantra or this is enough sir.I have confidence that i will see Ambal(Parvathi).

    ReplyDelete