Friday, February 26, 2010

சித்தர்களின் அருளாசியைப் பெற எனது மானசீக குரு ஐயா பி.எஸ்.பி.அவர்களின் ஆலோசனை

சித்தர்களின் அருளாசிபெற எனது மானசீககுரு பி.எஸ்.பி.ஐயா காட்டும் வழிமுறை

வேலூரிலிருந்து திரு அண்ணாமலை செல்லும் வழியில் பர்வத மலை இருக்கிறது.இந்த பர்வத மலைமீது இருக்கும் சிவலிங்கத்தை தினமும் இரவு 11 மணிக்கு சித்தர்கள் வழிபடுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.நள்ளிரவு 2 மணிக்கு மேல் இந்த சிவலிங்கம் இருக்கும் கருவரைக்குச் சென்றால் சித்தர்கள்,தேவர்கள் வழிபட்ட அடையாளங்கள் தெரியும்.பலர் இதை பார்த்திருக்கிறார்கள்.

பர்வத மலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதிக மனவுறுதியோடு இருக்க வேண்டும்.இந்த மலைமீது பயணிக்கும்போது செங்குத்தான பாதைகளும்,தவழ்ந்து செல்லுமாறு இரும்புத் தண்டவாளங்களும் இருக்கும்.பயந்த சுபாவம் உள்ளவர்கள்,உடல்நலம் பாதித்தவர்கள் செல்லாமல் தவிர்ப்பது நன்று.தனியாக பர்வத மலைக்குச் செல்வது தவறு;குழுவாக செல்வது நன்று.காலை 6 மணிக்கு மலை ஏறத்தொடங்குவது நன்று.அப்போதுதான்,இருட்டுவதற்குள் சிவலிங்கத்தை தரிசித்துவிட்டுத் திரும்பிவரமுடியும்.

முடிந்த வரையிலும் இரவில் பர்வத மலைமேல் தங்காமலிருப்பது நன்று.அப்படி தங்கிட விரும்பினால்,பர்வத மலைக்கோயிலில் இருந்து ஒரு பர்லாங்கு தூரத்தில் தங்கலாம்.நள்ளிரவில் சித்தர்களும்,தேவர்களும் பூஜை செய்வது தினசரிக்கடமைகளில் ஒன்று.அதிகாலையில் சிவலிங்கத்தைத் தரிசித்துவிட்டு,விடிகாலையில் மலையை விட்டுக் கீழிறங்கி வருவது நன்று.

இவ்வாறு செய்தால்,சித்தர்களின் ஆசியும் சிவலிங்கத்தின் ஆசிர்வாதமும் கிடைக்க நமக்கு ஒரு வாய்ப்பாகும்.
சித்தர்களிடம் எனக்கு இதைச் செய்து தாருங்கள் எனக் கேட்கக்கூடாது;நமது ஒழுக்கம்,மற்றவர்களுக்கு நாம் உதவிசெய்யும் சுபாவம்,நமது பக்தி இவற்றைப் பொறுத்து தாமாகவே உதவி செய்வர்.
நன்றி:சுபஜோதிடம்,பக்கம் 36,37;ஜீலை 2008.

1 comment:

  1. தகவலுக்கு நன்றி! சித்தர் வழிபாடு மற்றும் சக்கரங்கள் (குறிப்பாக திரூமூலர் மனோவசிய சக்கரம் பற்றி விளக்க வேண்டுகிறேன்.)

    ReplyDelete