Wednesday, January 23, 2013

இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்




இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர் - நெல்லை விவேகநந்தா; பக்.252; ரூ.125; வானதி பதிப்பகம்,சென்னை - 17; 044- 2434 2810.
÷நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் புத்தெழுச்சிக்கு வித்திட்டவர்களுள் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். இந்து மதம் குறித்து மேற்கத்திய நாடுகளில் பரப்பப்பட்டிருந்த பிழையான கருத்துகளை சிகாகோவில் தான் நிகழ்த்திய ஒரே சொற்பொழிவில் தகர்த்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்க்கை வரலாற்றை சுவையான நடையில், மாணவர்களும் எளிதாகப் படிக்கும் கதை வடிவில் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் நெல்லை விவேகநந்தா.
÷சிறுவன் நரேந்திரனின் தாத்தா துவங்கி, அவரது அன்னை, உடன் பிறந்தவர்கள் வரை சிறு தகவல்களையும் பொருத்தமான இடங்களில் பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சிரத்தை புலப்படுகிறது. சுவாமி விமூர்த்தானந்தர் அணிந்துரை வழங்கி இருக்கிறார்.
÷ஒவ்வோர் அத்தியாயத்திலும் பெட்டிச் செய்திகளாக துணுக்குத் தகவல்கள் அளிக்கப்பட்டிருப்பதும் சிறப்பு.
÷எனினும், ஆதாரப்பூர்வமான வரலாறு என்ற கோணத்தில் இந்நூலைக் கருத முடியாது என்பது முக்கியமான குறை. நூலின் ஆக்கத்தில் பயன்படுத்திய ஆவணங்களையும், குறிப்புகளையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருந்தால் நூலின் சிறப்பு கூடியிருக்கும்.
நூலின் உள்பக்கங்கள் அனைத்திலும் "இந்து மதத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்' என்றே காணப்படுகிறது; அட்டையில் மட்டும் பெயர் மாறியிருக்கிறது. இந்தப் பிழையைத் தவிர்த்திருக்கலாம்.நன்றி:தினமணி தினசரி

No comments:

Post a Comment