Thursday, January 10, 2013

மார்கழி மாதத்து அமாவாசையை(11.1.13) பயன்படுத்துவோம்!!!




பூமியில் ஒரு வருடம் என்பது தேவ உலகத்தில் ஒரு நாளுக்குச் சமம் ஆகும்.தேவ உலகத்தில் அதிகாலை நேரமே,பூமியில் மார்கழி மாதம் ஆகும்.எனவே,மார்கழி மாதம் புனிதம் மிகுந்த,வழிபாட்டுக்கு ஏற்ற மாதமாக ஆகிறது.தவிர,குருவின் சொந்தவீடுகளில் முதல் வீடான தனுசு ராசியில் ரவியாகிய சூரியன் பயணிக்கும் மாதமே மார்கழி ஆகும்.
இந்த மார்கழியன்று முப்பது நாளுமே பிரம்ம முகூர்த்த நேரமான காலை 4.30 முதல் 6 மணிவரையிலும்,எந்த ஒரு இறைவழிபாடு செய்தாலும் அது விரைவான,சக்திவாய்ந்த பலன்களை தை பிறந்ததும் தரும் என்பது பல லட்சம் இந்துக்களால் நிரூபிக்கப் பட்ட உண்மை ஆகும்.
அப்பேர்ப்பட்ட மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையானது 11.1.2013 வெள்ளிக்கிழமை அன்று வருகிறது.காலை 4.30 முதல் 6 மணி அல்லது காலை 11.30 முதல் 12 மணி அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் 10.30க்குள் இந்த நேரங்களில் உங்களுக்கு வசதியான நேரம் ஒன்றில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.
இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்காதவர்கள்,இந்த நாளில்  மேற்கூறிய நேரங்கள் ஒன்றில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;
பல நாட்கள்/மாதங்களுக்கு முன்பு ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கி,பல்வேறு சூழ்நிலைகளால் தொடர்ந்து ஜபிக்க இயலாதவர்கள் இன்று மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள்,இன்று மட்டும் அதை நிறுத்திவிட்டு ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்.
சிவனருள் விரைவில் கிடைக்க விரும்புவோர்,இந்த அமாவாசையில் அதாவது வெள்ளிக்கிழமை இரவில் அண்ணாமலைகிரிவலம் செல்வது மிக நன்று.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment