Tuesday, January 8, 2013

இந்திய ஆன்மிகத்தின் சிறப்பு நரேந்திர மோடி பெருமிதம்

ஆமதாபாத்: "சர்வதேச நாடுகளை உலுக்கும், புவி வெப்பமயமாதல், பயங்கரவாத சம்பவங்கள் ஆகிய பிரச்னைகளுக்கு, இந்திய ஆன்மிகத்தில் தீர்வு உள்ளது,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் நடந்த, இளைஞர் ஆண்டு விழாவில், அம்மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நரேந்திர மோடி பேசியதாவது: புவி வெப்பமயமாவதால், உலகின், இயற்கை சூழ்நிலை மாறி வருகிறது. இதனால், மனித சமுதாயம், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பயங்கரவாத சம்பவங்களும், உலக நாடுகளுக்கு, பெரும் சவாலாக உள்ளன. இவற்றுக்கு என்ன தீர்வு என, தெரியாமல், உலக மக்கள், கவலையடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைய தலைமுறையினரின் திறமையை, உலக நாடுகள் உணர்ந்துள்ளன. குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில், நம் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள், சர்வதேச அளவில், சாதனைகளை நிகழ்த்துகின்றனர். ஆனால், நம் ஆன்மிகத்தில் உள்ள மிகச் சிறந்த போதனைகளை, சர்வதேச சமுதாயம், இன்னும் முழுமையாக உணரவில்லை. நம் நாட்டைச் சேர்ந்த மகான்கள், இயற்கையை, தாயாக மதித்தனர். தாயாருக்கான அந்தஸ்தை, இயற்கைக்கு அளித்தனர். அதேபோல், சக மனிதர்களை, நம் உற்றார், உறவினர் போல், கருத வேண்டும் என்றும், மகான்கள், போதித்துள்ளனர். அவர்களின் போதித்த கொள்கையை பின்பற்றினால், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்

No comments:

Post a Comment