Wednesday, January 23, 2013

நேரடியாக சந்திக்க விரும்பும் வாசக,வாசகிகளுக்கு!!!




ஆன்மீகக்கடல் ஆசிரியரை நேரடியாக சந்தித்து ஜோதிட ஆலோசனை கேட்கவிரும்புவோர் மின் அஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.


கடுமையான சிக்கல்களில் இருந்து விடுபட  விரும்புவோர்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர்,தகுந்த ஜோதிட வழிகாட்டி,ஆன்மீக குருவைத் தேடுபவர்கள் ஒருமுறை ராஜபாளையத்து வந்து ஜோதிட ஆலோசனை கேட்பது நல்லது.வேறு மாநிலங்களில் வசிப்பவர்களும்,தொலை தூரத்தில் இருப்பவர்களும் மின் அஞ்சல் அல்லது செல் போன் மூலம் ஜோதிடப் பலன்களை அறிந்து கொள்ளலாம்.


நீங்கள் தரும் ஜோதிட தட்சிணையில்(கட்டணத்தில்) நான்கில் மூன்று பங்கு பின்வரும் ஆன்மீகக்கடல் சேவைகளுக்கு செலவிடப்படுகிறது.
ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாக அச்சடித்து,உலகம் முழுவதும் அனுப்பிவைத்தல்!தகுந்த ஜாதகர்களுக்கு விநியோகம் செய்தல்;தகுந்த ஜாதகர்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரப்புதல்;
ஸ்ரீகால பைரவர் வழிபாட்டுமுறையை நோட்டீஸாக அச்சடித்து,பிரதோஷ நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பழமையான சிவாலங்களில் விநியோகம் செய்தல்!!


ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோக்களை அச்சடித்து,தகுந்த ஆன்மீகக்கடல் மற்றும் நேரில் அறிமுகமாகும் ஜோதிட வாடிக்கையாளர்களுக்கு விலைக்கு கொடுத்தல்!!நேரில் சந்திக்கும் வறியவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தல்;அவ்வாறு இலவசமாக வாங்குபவர்களை அடிக்கடி சந்தித்து அவர்கள் முறையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யத் தூண்டுதல்;அவர்கள் தொடர்ந்து ஒரு வருடம் வரை வழிபாடு செய்ய வைத்தல்!!

டூ வீலர்,ஃபோர் வீலர்களில் ஒட்டும் விதமாக ஓம்சிவசிவஓம் ஸ்டிக்கர் அச்சடித்து இலவசமாக விநியோகம் செய்தல்!!!

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த பட்டியலை(உரிய விளக்கங்களோடு) நோட்டீஸாக அச்சடித்து,சனிப்பிரதோஷ நாட்களில் தமிழ்நாடு  முழுவதும் இருக்கும் பெரிய சிவாலயங்கள்,ஜீவசமாதிகளில் நடைபெறும் குருபூஜை நாட்களில் விநியோகம் செய்தல்(22.1.13 அன்று மாலை மலரில் ஐந்தாம் பக்கத்தில் நமது படைப்பு வெளி வந்திருக்கிறது;வேறு ஒருவரின் பெயரில்!)

குடிப்பழக்கத்தை நிறுத்த உதவும் பதினெட்டாம் படி கருப்பசாமி வழிபாட்டினை நோட்டீஸாக அச்சடித்து அம்மன் கோவில்களில் மாதாந்திர வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி பூஜை நாட்களில் விநியோகம் செய்தல்!!
ஈஸ்வரபட்டர் சுவாமிகளின் புகைப்படத்தை லேமினேஷன் செய்து தகுந்த தொழிலதிபர்களுக்கு இலவசமாக வழங்குதல்;நேர்மையாக தொழில் செய்து வரும் இளம் தொழிலதிபர்களுக்கு ஜோதிட ஆலோசனையோடு ஆன்மீகப்பாதுகாப்பு அளித்தல்!!!

சத்சங்கங்க நிகழ்ச்சிகளிலும்,நேரடி சந்திப்புகளிலும் மேலே அச்சடிக்கப்படும் நோட்டீஸ்கள் எனப்படும் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டே இருப்பது!!

ஜீவசமாதி வழிபாட்டுமுறைகளை துண்டுப்பிரசுரமாக அச்சடித்து கோவில் திருவிழாக்களில் விநியோகம் செய்து கொண்டே இருப்பது!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment