Thursday, August 9, 2012

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? பகுதி 2



ஐம்புலன்களும் ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படுவது தாம்பத்திய நடவடிக்கையில் ஈடுபடும்போது மட்டுமே! இன்றைக்கு அரசியல் நம்மை ஆட்டிப்படைக்கிறது என்று எரிச்சல்படுகிறோம்.ஆனால்,அரசியலை ஆட்டிப்படைப்பது எது தெரியுமா? காம அரசியல்! இது தொடர்பாக எவ்வளவுதான் விரிவாக எல்லோருக்கும் புரியும் விதமாக பதிவுகள் எழுதினாலும்,இதனால் விழிப்புணர்வு ஏற்படுவது மிக மிகக்  கடினம்.ஆனால்,நாம் எழுதிய பின்னர் அதில் இருக்கும் டெக்னிக்குகள் தவறானவர்களுக்கு வழிகாட்டும் பார்முலாவாகப் போய்விடும் ஆபத்து இருக்கிறது.


நாம் ஒவ்வொருவருமே சில தெய்வீக சக்திகள்,ஆசிர்வாதங்களுடன் பிறந்திருக்கிறோம்.நமக்கென்று சந்தர்ப்பம் அமையும்போது நமது ஆன்மீக குரு நம்மைத் தேடிவருவார்;அவரது வழிகாட்டுதல் மூலமாக நாம் நமது ஆன்மீக முன்னேற்றத்தை இதை ஆத்மபல முன்னேற்றம் என்றும் கூடச் சொல்லலாம்;இந்த ஆத்மபல முன்னேற்றத்தை தியானம் செய்வதன் மூலமாகவும்,தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை குறிப்பிட்ட நாளில் வழிபாடு செய்துவருவதன் மூலமாகவும் அடையலாம்.


உதாரணமாக, சஷ்டி தோறும் முருகக்கடவுள் வழிபாடு செய்வது;
40 பங்குனி உத்திரநாட்களுக்கு முருகக்கடவுளை தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும்;
விநாயகரை 120 சதுர்த்திகளுக்கு விரதமிருந்து வழிபட்டால்,மகத்தான செல்வச் செழிப்பு கிடைக்கும்;


12 மாதந்திர திங்கட்கிழமைகளுக்கு விடாமல் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் இந்த பிறவியிலேயே பெரும் செல்வச் செழிப்பை அடைவோம்;
கிரகண நேரங்களில் நமது இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை பிரம்மச்சாரிய விரதமிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் வழிபட இஷ்ட தெய்வத்தின் அருளாசியும்,மந்திர ஆற்றலும் கிட்டும்.

ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை சிவராத்திரி வரும்.அந்த நாளில் காலையிலேயே திரு அண்ணாமலைக்குச் சென்றுவிடவேண்டும்.பகல் முழுக்க ஓய்வு எடுக்க வேண்டும்.இரவு 9 மணியிலிருந்து 11 மணிக்குள்  கிரிவலம் புறப்பட வேண்டும்.கிரிவலம் முடித்தமறுநாள் அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.தரிசித்தப்பின்னர்,நமது வீட்டுக்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக் கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லக் கூடாது.இப்படி 12 தேய்பிறை சிவராத்திரிகளுக்கு கிரிவலம் சென்றால்,நமது ஜாதகப்படி இருக்கும் எப்பேர்ப்பட்ட பாவங்களும்,கர்மவினைகளும்,முன்னோர்களின் தவறுகளும் கரைந்துபோய்விடும்.அதே சமயம்,அப்படிக் கரைந்து போனதால்,நமது பொருளாதார நிலை உயர்ந்துகொண்டே செல்லும்.

யாருக்கெல்லாம் ஆத்மபல முன்னேற்றம் இருக்கிறதோ,அவர்களுக்கே இந்த பதிவு தேடிவரும்;யாருக்கெல்லாம் அவர்களின் குலதெய்வத்தின் அருளாசி முழுமையாக(பரிபூரணமாக) இருக்கிறதோ அவர்களே இதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் ஒன்றைச் செயல்படுத்திப்பார்க்க முடியும்.யாருக்கெல்லாம்   மன ஒழுக்கம்(சுயக் கட்டுப்பாடு) இருக்கிறதோ அவர்களே இறையருளை இந்தக்கலியுகத்தில் பெற முடியும்.
அதென்ன மன ஒழுக்கம்?
ஒருவனுக்கு ஒருத்தியாகவும்,ஒருத்திக்கு ஒருவனாகவும் வாழ்வது! அசைவம் எப்போதும் சாப்பிடாமல் இருப்பது!! எவருடைய சொந்தப்பிரச்னையிலும் தாமாகவே மூக்கை நுழைக்காமல் இருப்பது!!!

மேற்கூறிய வழிபாடு மட்டுமல்ல;எந்த ஒரு ஆன்மீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும் சரி;ஒருவனுக்கு ஒருத்தியாக வாழாமல் இருக்கும்போது நமக்கும் நமது  குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டிய ஆன்மீக வரப்பிரசாதங்கள்(மேலே கூறியவைஅனைத்துமே) கிடைக்காமலேயே போய்விடுகிறது.


நாம் இறைவழிபாடு,தியானம்,அன்னதானம்,பூஜை செய்தல்,மானசீக வழிபாடு,தவம்,மந்திர ஜபம் போன்ற பலவிதமான ஆன்மீகச் செயல்பாடுகளால் நமக்குக்கிடைக்கும் இறையருளும்,திருவருளும்,குருவருளும் நமது உடலுக்குள் இருக்கும் சுக்கிலம்,சுரோணிதத்தில்தான் சேமிப்பாகிறது.அது தனது வாழ்க்கைத்துணைக்குப் பகிர்ந்தளிக்கும்போது அந்தத் தம்பதியர் வளமுடனும்,ஆத்மபாதுகாப்புடனும் வாழ்ந்துவருகிறார்கள்.முறையற்ற உறவில் ஈடுபடும்போது அது வீணாகிவிடுகிறது.அதனால்தான் பலர் முன்னேற்றத்தை அடைவது இல்லை;


எனவே,நாம் நமது ஆன்மீக வாழ்க்கையில்,ஆத்மபலத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடும்போது ஒருவனுக்குஒருத்தி என்ற கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்;சபலத்துக்கு துளியும் இடம் தரக்கூடாது.எதெல்லாம் நம்மை சபலத்துக்குள்ளாக்குகிறதோ அதை தவிர்க்க வேண்டும்;அதனால் எவ்வளவு பண நஷ்டம்,பொருள் நஷ்டம்,வேறு விரையங்கள் வந்தாலும் சரி.  

ஒரு  பழமொழியை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: தவறான பாதையில் எவ்வளவு தூரம் சென்றாலும் சரி,திரும்பி வாருங்கள்.


எனவே, ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்ற இந்து தர்ம மரபினை நாம் பின்பற்றினால் மட்டுமே நம்மை இந்தப்பிறவியில் நிம்மதியாகவும்,ஆன்மீக முன்னேற்றத்துடனும் இருக்கச் செய்யும்;அடுத்த பிறவியில் சிறந்த மனித பிறப்பாக உருவெடுக்க வைக்கக் காரணமாக இருக்கும்.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. உள்ளபடி சக்தி நிலை வீணாவதை தெளிவாகக் கூறி உள்ளீர்கள். புரிந்துக் கொண்டவர்கள் புத்திசாலிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    அந்த திதி வரும் நாட்களை தொகுத்து ஒரு பதிவாக கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் .

    நன்றி அய்யா

    ReplyDelete