Sunday, February 5, 2012

தமிழ்நாட்டின் மிகப்பெரிய விநாயகர் இருக்குமிடம் திருவண்ணான் மலை,ஸ்ரீவில்லிபுத்தூர்



 
 தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உண்டு. ஒவ்வொர் ஆலயத்திற்க்கும் ஒரு தனிவரலாறு உண்டு. அனைத்து சைவ ஆலயங்களிலும் நம்மை முதலில் எதிர்கொண்டு வரவேற்ப்பது அண்ணன் – தம்பி ஆகிய இருவர் எளிமையென்றால் என்ன என்பதை அவர்களிடம் இருந்துதான் படிக்கவேண்டும். அண்ணனுக்கு மனமுவந்து ஒரு சிறுபுல்லை அர்ப்பணித்தாலும் பேரானந்தமடைவார். தம்பியோ தேவர்களுக்கு அரசையே மீட்டுக்கொடுத்தும், தான் உடுத்த ஒரு சிறு கோவணமே போதும் என்று ஞானபண்டிதனாய் ஓதுங்கிக்கொண்டவர்.
அப்படிப்பட்ட இருவருக்கும் தமிழகத்தில் என்னற்ற கோயில்களை அவர்கள் தயவால் பக்தர்கள் ஏற்ப்படுத்தியுள்ளனர்.
 
அந்த ஆனைமுகத்தனுக்கு ஒரு சிறு உளி அளவில் இருந்து ஒரு பெரும்பாறை அளவிற்க்கெல்லாம் சிலைகள் வடித்து, அபிஷேகித்து, ஆராதித்து மகிழ்கின்றனர்.
 
தமிழகத்தில் பெரிய விநாயகர் மூர்த்தங்களுக்கு புகழ்பெற்றது மூன்று இடங்கள்
 
1. முக்குறுணி விநாயகர், மதுரை (தெப்பக்குளத்தில் நாயக்கர் கண்டெடுத்தார்)  
2. விக்னேஸ்வரர், ஈச்சனாரி, கோவை
3. கற்பக விநாயகர், பிள்ளையார்பட்டி.
 
இவற்றிற்கெல்லாம் பெரிய மூர்த்தம் கொண்ட கணபதி, மிகவும் அறியப்படாதவராக இருக்கிறார். முதன்முதலில் அவரைப்பார்த்த்தும் அடேயப்பா அளவில் முக்குறுணி பிள்ளையாரையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டாரே என்று ஆச்சர்யப்பட்டேன். பீடம் ஏதும் இல்லாமலே 7 ½ அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ஆகிருதியான வடிவத்தில் காட்சிகொடுக்கின்றார் இங்கு கணபதி.
 
திருவில்லிபுத்தூரில் (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருந்து 3கி,மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை எனும் சிற்றூர். மினிபஸ் வசதியும், ஆட்டோ வசதியும் அதிகமுண்டு. மலையில் ஸ்ரீஸ்ரீநிவாசபெருமாள் ஏழுமலையானை ஒத்தவடிவத்தில் புன்சிரிப்பு தவழும் முகத்துடன் அருள்பாலிக்க..கீழே கோனேரி தீர்த்த்த்தக்கரையில் மலைபோன்ற வடிவத்தில், அரசமரத்தடியில் கணபதியார் அருள்பாலிக்கிறார்.
 
 
50ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பக்தர் தன் கனவில் யானை துரத்துவது போலக் கனவுகண்டார். ஒரேகனவு மீண்டும் மீண்டும் தொடர்ந்தது பல இரவுகளுக்கு. கலங்கிய பக்தருக்க கனவில் தன் இருப்பிடம் அறிவித்தார் கணேசன். அவர் சொன்ன இட்த்தைக்கண்டவருக்கு பேரதிர்ச்சி. அது ஆற்றில் வண்ணாரர்கள் துணி வெளுக்கும் கல். தயங்கிய நபர் ஆட்கள் உதவியுடன் கல்லை திருப்ப, கண்டோர்கள் அனைவருக்கும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் கலந்து வந்த்து. ஆச்சர்யம் விளைந்த காரணம் இவ்வளவு பெரிய கனேசனின் மூர்த்த்த்தைமுதன்முதலில் கண்டதால். அதிர்ச்சி பிறந்ததுக்கான காரணம் இதை வெறும் சலவைக்கல்லாக நினைத்து கணேசனின் முதுகில் அல்லவா இவ்வளவு நாளும் நம் துணிகளை அடித்து துவைத்திருக்கிறோம் என்று.
பின்னர் ஆற்றிலிருந்து கணேசனை எடுத்து கோனேரி தீர்த்தக்கரையில் பிரதிஷ்டை செய்திருக்கின்றார்கள்.
 
ஒருமுறை தமிழகத்தின் மிகப்பெரிய கணபதியை தரிசித்து வாருங்கள்

1 comment: