Monday, August 29, 2011

சில பண மொழிகள்:அனுபவ உண்மைகள் :மறுபதிவு



உனது வாயையும் பணப்பையையும் கவனமாகத் திற;அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

கடன் என்பது கவனக்குறைவால் ஏற்படும் சுமை.

நல்லவர்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பார்கள்.

பணத்தின் குவியல் = கவலைகளின் குவியல்

ஏழ்மை பொல்லாதது,அது சிலரைப் பணிவுள்ள மனிதராக மாற்றுகிறது.ஆனால் பலரை தீதும் சூதும் கொண்ட மனிதராக வாழ்ந்து மடியக் காரணமாகின்றது.

எமனுக்கு அஞ்சாத நெஞ்சம் கடன்கொடுத்தவனை நினைத்து அஞ்சும்.

தயவு செய்து எவரிடமும் கடன்படாதீர்கள்.நாயிடம் கடன் பட்டிருந்தால் கூட அதை ‘ஐயா’ என அழைக்கவேண்டியிருக்கும்.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்;இல்லாதவனுக்குக் கவலை.

பணம் நம்மிடம் வரும்போது அதற்கு இரண்டுகால்கள்.நம்மை விட்டுப்போகும் போது அதற்கு பல கால்கள்.

பணத்தை வெறுப்பதாகக்கூறுபவர்கள் வெறுப்பது பிறரது பணத்தைத் தான்!

இன்று நாம் செய்யவேண்டிய காரியம் இரண்டு தான்.
ஒன்று. பணக்காரர்கள் எப்படி உழைக்கிறார்கள் என்பதை ஏழைகள் அறிய வேண்டும்.
இரண்டு.  ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பணக்காரர்கள் அறிய வேண்டும்.

தனிமையும், தான் யாருக்கும் வேண்டப்படாதவராகிவிட்டோமோ என்ற உணர்வும் மிகக் கொடிய வறுமையாகும்.

எவனால் சிரிக்க முடிகிறதோ,அவன் கட்டாயம் ஏழையாக இருக்க மாட்டான்.


நீ பணக்காரனாக வேண்டுமா? நிறைய்ய்ய பணம் புழங்கும் இடத்திற்கு தினமும் ஒருமுறை போய்வருவது உனது கடமைகளில் முதன்மையானதாக இருக்கட்டும்.அடுத்தசில வருடங்களில் உனது இடத்தில் பணம் ஒரு ஊற்றாக பெருக்கெடுக்கும்.

குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்க்கும் வரைதான் அதை நாம் பாதுகாக்க வேண்டியிருக்கும்.அதன் பிறகு, அது நம்மையும், தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும்;கூடவே தன்னையே பல மடங்கு பெருக்கிக் கொண்டே செல்லும்.இது அனுபவ உண்மை.

ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்களுக்கு இது போல பணம் பற்றிய அனுபவ உண்மைகள் தெரிந்திருக்கும் அல்லது உணர்ந்திருப்பீர்கள்.அவற்றை எனக்கு அனுப்பினால், உங்கள் பெயர்,(தேவைப்பட்டால்)மின்னஞ்சல் முகவரியுடன் வெளியிடத்தயார்.
உங்களால் நமது தமிழ்கூறு நல்லுலகம் பணம் பற்றி நிறைய்ய்ய அறிந்து கொள்ளட்டும்.

1 comment:

  1. panam unnidam irunthal unnai unakku theriyathu.

    panam unnidam illai endral, unnai oorukku theriyathu.

    ReplyDelete