Monday, August 22, 2011

அறிவியல் வளர்ச்சியும்,ஆன்மீகப்புரட்சியும்










மேலே இருக்கும் புகைப்படம் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்டது.புவியியல் வரைபடம் பற்றிய அடிப்படை ஞானமுள்ளவர்களுக்கு இதில் மேற்கு ஐரோப்பா இருப்பது புரியும்.
பளிச்சென்று தெரியும் பகுதியில் நீலமாக இருப்பது கடல் பகுதி;பச்சையாக இருப்பது வனாந்திரப்பகுதி;இருட்டாக இருப்பது இரவு எப்படி பூமியின் சில பகுதிகளைக் கவ்வுகிறது என்பதைக் காணலாம்.இந்த புகைப்படம் மனித அறிவாற்றலின் உச்சம் எனக் கூறலாம்.

இந்த புகைப்படத்தை சில கருவிகளைக் கொண்டு ஆராய்ந்தால்,பூமியில் நிலப்பரப்பிலும்/நீர்ப்பரப்பிலும் என்னென்ன கனிமவளங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.இதுவும் மனித அறிவாற்றலின் உச்சமே!ஆனால்,இவையெல்லாம் புற உலகிற்குத் தேவையான விஷயங்களில் சாதனை செய்திருக்கிறோம் என்பதற்குச் சான்றாகும்.

அமெரிக்காவோ,ஜெர்மனியோ,இங்கிலாந்தோ மனித கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறதா?அதன் முடிவுகளை வெளியிடமுடிகிறதா?

சோவியத் ருஷ்யாவில் ஒரு காமிராவைக் கண்டறிந்துள்ளனர்.கிர்லியன் கேமிரா என்பது அதன் பெயர்.ஒரு கிர்லியன் கேமிராவின் விலை ரூ.40 லட்சம்.அதன் மூலம் ஒரு புகைப்படம் எடுத்தால்,அதன் விலை ரூ.20,000/-ஒரு மனிதனை காலையில் கிர்லியன் கேமிரா மூலமாக புகைப்படம் எடுத்தால்,அவனது தலையைச் சுற்றி சுறுசுறுப்பைத்தரும் ரோஜா அல்லது வெள்ளை நிற வட்டம் ஒளிருகிறது.மதியத்தில் அதன் அடர்த்தி குறைந்து ,இரவில் அது கறுப்பாக மாறிவிடுகிறது.மனித எண்ணங்களை ஓரளவு மட்டுமே படம்பிடிக்க முடிகிறது.இந்த கிர்லியன் கேமிராவை பிரம்மாண்டமாக தயார் செய்து ஒரு செயற்கைக்கோளில் அதைப் பொருத்தி,விண்ணில் ஏவ வேண்டும்.அப்படி ஏவியபின்னர்,அந்த செயற்கைக் கோளை இந்தியாவுக்கு நேரான வான் பகுதியில் நிலைநிறுத்திட வேண்டும்.இந்தியாவின் புராதனமான நகரங்களான காசி,நவபிருந்தாவனம்,திரு அண்ணாமலை,ஸ்ரீரங்கம்,சதுரகிரி போன்ற பகுதிகளை ஓராண்டு வரை ஒரு விநாடி கூட விடாமல் இந்த கிர்லியன் கேமிரா மூலமாக படங்களை எடுத்துக்கொண்டே இருந்தால்,அது மனித ஆன்மீக வரலாற்றில் மகத்தான அதிசயங்களை அள்ளி,அள்ளித்தரும் என்பது சர்வ நிச்சயம்.

மேல்நாட்டு அறிவியல் மனதுக்குள் சென்று ஆராய வில்லை? மனித உயிர் மனிதனின் உடலுக்குள் எங்கேயிருக்கிறது என்பதைக் கண்டறிய வில்லை? மாறாக மனிதனது ஆயுளை அதிகரிக்க செயற்கையான வழிகளைக் கண்டறியவே முயலுகிறது.

நாமோ,இன்னும் மேல்நாட்டுக் கலாச்சாரமே உயர்ந்தது என்னும் மயக்கத்தில் இருக்கிறோம்.நமது இந்துப்பண்பாடு எவ்வளவு உயர்ந்தது என்பதை உணர்ந்தால்,நாமெல்லாம் ஜீன்ஸ்,ஐபேடு,ஹாலிவுட் படங்கள்,கோகோ கோலா வைப் பயன்படுத்துவோமா? கத்தோலிக்க கிறிஸ்தவப் பெண் உளவாளியை  இந்தியாவின் தலைமை பீடத்தில் வைத்திருப்போமா?

நமக்கே நமது இந்துதர்மத்தின் பெருமைகளை அறியாமல் தடுப்பதில் காங்கிரஸீம்,கம்யூனிஸ்டுகளும்,நாத்திக வாதிகளும் கூட்டுச்சேர்ந்து செயல்படுவது கூட நமக்குத் தெரியவில்லை?

ஒரு ஆன்மீகக்கடல் வலைப்பூவால் 120 கோடி இந்துக்களுக்கு (இந்தியாவின் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்,சீக்கியர்களும்,பவுத்தர்களும்,சமணர்களும்,ஜெயினர்களும் பிறரும் இதில் அடக்கம்)
(*இந்தியாவிலிருந்து மெக்கா செல்லும் இந்திய முஸ்லீம்களை அங்கிருப்போர்,இந்துக்கள் என்றே சொல்கிறார்கள்.1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும்போது,எனது நாடு பாகிஸ்தான் என்று இங்கிருந்து சென்ற இஸ்லாமியர்களை பாகிஸ்தான் முஸ்லீம்கள் இந்த நொடி வரை=22.8.2011 வரை ஏற்றுக்கொள்ளவில்லை;அப்படிப் போனவர்கள்,பாகிஸ்தானில் தன்னை ஏற்றுக்கொள்ளவைக்கவே முகாஜிர் குவாமி இயக்கம் என்ற இயக்கம் ஆரம்பித்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.பாவம்!)விழிப்புணர்வு உருவாக்குவது கடினமே!
ஓம்சிவசிவஓம்






No comments:

Post a Comment