Friday, January 10, 2020

கர்மவினைகளை கரைக்கும் தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் (விகாரி & சார்வரி)


உலகத்தின் மையப்பகுதியாக இருக்கும் அண்ணாமலையில் நாம் வாழ்ந்து வரும் காலத்தில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;பலர் பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நம்புகின்றார்கள்;இது முழுத் தவறு;மறு பிறவி இல்லாத முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இப்பிறவிக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதும்.முக்தி உறுதியாக கிட்டும்;இது அருணாச்சலேஸ்வரர் மீது சத்தியமான உண்மை;


உலக வரலாற்றில். . . இல்லையில்லை ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் தாயாகிய அன்னை பார்வதி தேவி;நம் அன்னைக்கு துணையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் குருவாக இருப்பவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும்(தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;) பரப்பியவரும்,சித்தர்களின் தலைவரும்,ரிஷிகளின் தலைவருமாகிய அகத்தியர் ஆவார்;


எனவே,ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரியன்றும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்;அவ்வாறு செல்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் நீங்கத் துவங்கும்;நமது முன்னோர்களாகிய பித்ருக்களில் ஒருவர் அல்லது ஒரு சிலர் கிரிவலம் வருவர்;அவர்களை கிரிவலத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டும்;நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு சித்தரின் வம்சாவழியைச் சேர்ந்தவரே! எனவே,நமது முன்னோராகிய சித்தர் தரிசனம் கண்டிப்பாக நமக்கு கிட்டும்;

அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்து 12 வது முறையோ அல்லது 36 வது முறையோ கிரிவலம் செல்லும் போது கிட்டும்;மிகுந்த பூர்வ புண்ணியம் செய்தவர்களுக்கு அன்னை பார்வதி தேவியின் தரிசனமும்,நமதுகுரு  அகத்திய மகரிஷியின் தரிசனமும் கிட்டும்;

பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால்,அடுத்த ஒருவருடத்திற்கு தேய்பிறை சிவராத்திரி நேரத்தை இங்கே குறிப்பிடுகின்றோம்;தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் சிவராத்திரி திதி என்பதை மறக்காதீர்கள்;

 விகாரி & சார்வரி வருடத்தின் தேய்பிறை சிவராத்திரி நாட்கள்:



24.12.2019 செவ்வாய் மதியம் 12.23 முதல் 25.12.2019 புதன் காலை 11.24 வரை

23.1.2020 வியாழன்(காலை சூரிய உதயத்தில் இருந்து அன்று நள்ளிரவு 2.22 வரை)

21.2.2020 வெள்ளி மாலை 6.14 முதல் 22.2.2020 சனி இரவு 7.19 வரை(மஹாசிவராத்திரி)

22.3.2020 ஞாயிறு காலை 11.23 முதல் 23.3.2020 திங்கள் மதியம் 1.13 வரை

21.4.2020 செவ்வாய்(காலை சூரிய உதயம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை)

20.5.2020 புதன் இரவு 9.09 முதல் 21.5.2020 வியாழன் இரவு 10.46 வரை

19.6.2020 வெள்ளி காலை 11.47 முதல் 20.6.2020 சனி மதியம் 12.34 வரை

18.7.2020 சனி இரவு 12.26 முதல் 19.7.2020 ஞாயிறு இரவு 12.15 வரை

17.8.2020 திங்கள் காலை 11.20 முதல் 18.8.2020 செவ்வாய் காலை 10.16 வரை(ஆவணி மாத முதல் தேய்பிறை சிவராத்திரி)



15.9.2020 செவ்வாய் இரவு 9.09 முதல் 16.9.2020 புதன் இரவு 7.23 வரை(ஆவணி மாத இரண்டாவது தேய்பிறை சிவராத்திரி) 

15.10.2020 வியாழன் காலை 6.35 முதல் பின்னிரவு 3.46 வரை

13.11.2020 வெள்ளி மாலை 4.11 முதல் 14.11.2020 சனி மதியம் 1.50 வரை

12.12.2020 சனி நள்ளிரவு 12.09 முதல் 13.12.2020 ஞாயிறு நள்ளிரவு 12.09 வரை(குபேர கிரிவலம் 2020)

11.1.2021 திங்கள் மதியம் 1.28 முதல் 12.1.2021 செவ்வாய் காலை 11.48 வரை

9.2.2021 செவ்வாய் பின்னிரவு 1.44 முதல் 10.2.2021 புதன் நள்ளிரவு 12.53 வரை

11.3.2021 வியாழன் மதியம் 3.17 முதல் 12.3.2021 வெள்ளி மதியம் 3.24 வரை(மஹாசிவராத்திரி)

10.4.2021 சனி காலை 5.54 முதல் 11.4.2021 ஞாயிறு காலை 7.01 வரை(மூன்று நாட்கள் இருக்கும் சிவராத்திரி)



சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான சிவபக்தர்கள்,அருணாச்சல சித்தர்கள் இந்த திதி ஆரம்பிக்கும் போது கிரிவலம் துவங்குவார்கள்;திதி முடியும் போதுதான் கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்;


400 ஆண்டுகளாகத் தான் தற்போதைய கிரிவலப்பாதையை நாம் பயன்படுத்தி வருகின்றோம்;அதற்கு முன்பாக கிரிவலப்பாதையின் நீளம் 50 கி.மீட்டராக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிவலப்பாதையின் நீளம் 1000 கி மீட்டர்களாக இருந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ







No comments:

Post a Comment