Thursday, September 1, 2016

கல்லீரல் கொழுப்பைச் சரிசெய்யும் வைத்திய முறைகள்

அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் கல்லீரல் கொழுப்புக்களை சரிசெய்யும் கிராமத்து கை வைத்தியங்கள்..
எலுமிச்சை மற்றும் தண்ணீர்
ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.
மஞ்சள் மற்றும் தண்ணீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, 15 நாட்கள் தினமும் இரண்டு டம்ளர் குடித்து வர, கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகும். ஹ
நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காயில்வைட்டமின் சி ஏராளமாக உள்ளதால், அது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். அதிலும் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பின், தொடர்ந்து 25 நாட்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, விரைவில் குணமாகியிருப்பதை உணர்வீர்கள்.
அதிமதுரம்
அதிமதுரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் திசுக்களின் அளவை அதிகரித்து, கல்லீரல் நோய்களைத் தடுக்கும். அதற்கு அதிமதுரத்தை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல நிவாரணம் கிடைக்கும்
வினிகர் மற்றும் தண்ணீர்
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதோடு, அழுக்குகளும் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
க்ரீன் டீ ஆய்வு
ஒன்றில் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கல்லீரலின் இயக்கம் அதிகரித்து, அதன் ஆரோக்கியம் மேம்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு
முக்கியமாக அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, கொழுப்புமிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment