Saturday, September 3, 2016

வாகா படம்பற்றிய ஒரு நடுநிலை விமரிசனம்! நன்றி மூஞ்சிபொய்த்தம்

நேற்று வாஹா படம் பார்த்தேன், உங்களுக்குளாம் காதல் காதல் அத தவிர வேற எதுவுமே தெரியாதா? ஏதோ வித்தியாசமா பார்டர்ல படம் எடுத்திருக்கானுகளேனு பாத்தா, அதே காதல் காதல், யோவ் டயருடக்கறு முதல்ல நீங்க ஹாலிவுட் படம் கூட பாக்கவேணாம், இந்தி படம் பஜ்ரங்கி பாய்ஜான் அப்டினு ஒரு படம் வந்தது, அதுலயும் ஒரு காரணத்திற்காக ஹீரோ எல்லை தாண்டி போய்வருவார். அதுலயும் காதல் இருக்கும், ஆனா அது ஊருகாய் மாதிரி இருக்கும் படத்துல, படமாயா எடுத்திருக்கீங்க? இதுல அட்வைஸ் வேற வெங்காயங்களா.. பாகிஸ்தான் காரன விரோதி மாதிரி ஆதிக்க நாடுகள் நமக்கு காட்டி எல்லை பிரச்சனைய பன்றாங்களாம், யோவ் டயருடக்கர் உண்மையிலேயே அங்க என்ன பிரச்சனை அவன் ஏன் நம்ம மேல இந்த காண்டுல இருக்கானு சின்ன பிள்ள கிட்ட கேட்டா கூட சொல்லும், உனக்கு தெரியலயா? இதுல முதல் சீன் ல ஒரு டயலாக் (பாகிஸ்தான்காரன் பேசுற மாதிரி) " உங்களுக்கு ஒரே மொழி இல்லை, ஒரே மதம் இல்ல...ஆனா எங்களுக்கு ஒரே மொழி, ஒரே மதம்" நீங்களாம் சம்பளத்துக்கு ஆர்மிக்கு வேலைக்கு வரீங்க நாங்களாம் அப்டி இல்லேனு. ஆனா அதுக்கு பதில் சொல்ற மாதிரியான டயலாக் ஒரு இடத்தில கூட இல்ல, டேய் லூசு டயருடக்கர் இதெல்லாம் பொருத்துக்கலாம்ட, ஆனா பாகிஸ்தான் இராணுவமே ஹீரோ காதல எதிர்த்து அத நிருத்த முயற்சி பண்ணுதுனு ரீல் விட்ட பாருடா, அதத்தான் தாங்க முடியலப்பா, இன்னும் நெஞ்சு வலிக்குது.. பாகிஸ்தான் ஆர்மிக்கு வேற வேலையே இல்லையா? இத விட பாகிஸ்தான் ஆர்மிய கேவல படுத்த முடியாதுதான்.
இதுல இடையில காஷ்மீர்ல கலவரம் பண்ணி பாகிஸ்தான் காரங்கள வெளிய போக சொல்றாங்களாம், அப்போ போற பாகிஸ்தான் பஸ்ஸ இந்தியர்கள் வழிமறிச்சு அந்த பஸ்ல போற பாகிஸ்தானிய பூராம் கொல்றாங்களாம், அடப்பாவி வரலாற என்ன அழகா மாத்துறீங்க.. இது நடந்தது பிரிவினையின் போது, இந்தியாவினை நோக்கி இந்துக்களும், சீக்கியர்களும் ஒரு புகை வண்டியில் வர, ஆனால் பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் இடைமறித்து, அந்த புகைவண்டியில் இருந்த அனைவரையும் கொன்று போட்டது இன்றும் சோகமான வரலாற்று நிகழ்வு. இதனை இந்தியர்கள் செய்வது போல காட்டுவது எவ்வளவு மட்டமான அயோக்கியத்தனம்? அதுல ஒரு பாய பாத்து பாகிஸ்தான் போனு மத்த பாயெல்லாம் சொல்ற மாதிரி சீன், அப்டி சொல்றவன் போட்டிருக்க உடை (கிட்டத்தட்ட காவி நிறம்), உடனே அந்த வயதான் பாய், சொல்வாரு நான் இங்கதான் பிறந்தேன், இது என்னோட ஊரு, இத விட்டு எங்க போக சொல்றேனு, அடப்பாவிங்களா காஷ்மீர் ல போய் உங்க புத்திய காட்டிருக்கீங்களே. நீ மதச்சார்பற்றவன்னு காட்டனும்னா வேற படம் எடு, ஏன் இல்லாதத சொல்லி அசிங்கபடுத்துற? இதுல ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி வேற தேசப்பற்றுனா பாகிஸ்தான வெருப்பது இல்லைனு, இதனை வேனா ஏத்துக்கலாம் ஆனா தேசப்பற்றை விட காதல் பெரிசுனு காட்டிறுக்கியே உன்னையலாம் எதால அடிக்கிறது? எப்டி இதையெல்லாம் கண்டுக்காம விட்டாங்க

No comments:

Post a Comment