Wednesday, February 9, 2011

மந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்:அண்ணன் காளிராஜன் அவர்கள் அனுப்பியது

சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை கிடையாது. மந்திரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவரின் அனுபவம் ஒன்றை கூறினார். அவர் ஒரு அரசு ஊழியர். அவருடன் பணிபுரிந்த ஒருவர் திடீர் என்று மூன்று மாதங்களாக அலுவலகம் வரவில்லை. அவர் மீண்டும் அலுவலகம் வந்தபோது கிறிஸ்தவ கண்காணிப்பாளர் வெளியில் அவர் நிற்பதை பார்தவுடன் "இது மடம் என்று நினைத்தாரா. நினைத்தால் வருவதற்கும் போவதற்கும். என்ன செய்கிறேன் என்று பாருங்கள். " என்று திட்ட ஆரம்பித்துள்ளார். என் நண்பர் வெளியே நின்றிருந்த அவரிடம் சென்று " இப்போது அலுவலதிற்குள் வராதீர்கள். கண்காணிப்பாளர் வீட்டில் சென்று பார்த்து விட்டு வாருங்கள். இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார்." என்று சொல்லி இருக்கிறார்.


அதற்கு அவர் "நான் இப்போது வருகிறேன். என்ன செய்கிறார் என்று பாருங்கள் என்று சொல்லிவிடு சிலநிமிடங்கள் கழித்து அலுவலகதில் வந்திருக்கிறார். கண்காணிப்பாளர் அவரை பார்தவுடன் "சார் வாங்க. எப்படி இருக்கீங்க. " என்றவர் பக்கதிலிருந்த எழுதரிடம் சாருக்குரிய சம்பளம் எல்லாவற்றையும் போட்டுக்கொடு என்று கூறியிருக்கிறார். என் நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது ஒன்றுமில்லை. ஒரு மந்திரம் சொன்னேன். அவ்வளவுதான் என்றிருக்கிறார். எனக்கும் சொல்லிக்கொடு என்று இவர் கேட்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்த மந்திர வித்தையை பெண்களை வசியம் செய்ய பயன்படுத்தி அற்ப ஆயுளில் இறந்து விட்டார்.




என் நண்பரே நாயின் வாயை கட்டும் மந்திரம் அறிந்தவர். மற்றொரு பெரியவர் பார்வை பார்த்து தேள் பூரான் பாம்பு கடி விஷங்களை நீக்கி குணமாக்குவார். அவரிடம் பேசியபோது என்ன மந்திரம் சொல்லி குணமாக்குகிறீர்கள் என்று நான் கேட்டபோது நம் தெய்வங்களின் பெயர்கள் தான். ஓடும் தண்ணீரில் நின்று லட்சம் தடவை சொல்லி உரு ஏற்றவேண்டும் அவ்வளவுதான் என்றார். இது போன்ற சில சம்பவங்களினால் மந்திரங்களின் மேல் நம்பிக்கை வந்தது. அகத்தியர் கருவூர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களை படித்தபோது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் வியாதிகளை போக்குவதற்கும், மூலிகை வைத்தியம் மட்டுமல்லாது மந்திரங்களாலும் தீர்க்க முடியும் என்பதை அறிந்தேன்.

எனவே மந்திரங்களுக்கு மாபெரும் சக்தி உண்டு என்பதை உறுதியாக நம்பலாம்.

1 comment: