Tuesday, February 22, 2011

21.2.2011


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் (81), ஞாயிற்றுக் கிழமை, காலையில் கொழும்பில் உள்ள மருத்துவமனையில் காலமானார். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.





அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதாக விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளரும் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஏற்கெனவே பாரிச நோயால் தாக்கப்பட்டதில் பார்வதியம்மாளின் நடமாட்டம் முடங்கிப்போனது. இந்நிலையில் கடந்த மாதம் வல்வெட்டித் துறையில் உள்ள வட்டார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.







அவரது இரண்டு மகள்களும் வெளிநாட்டிலிருந்து தேவையான நிதி உதவியை அளித்தபோதிலும் நேரில் வராத காரணத்தால் மனமுடைந்துபோனார். இதனால் உணவு சாப்பிடுவதை நிறுத்தினார். இரண்டு மகள்களில் ஒருவர் கனடாவின் டொரண்டோ நகரிலும் மற்றொருவர் சென்னையிலும் வசிக்கின்றனர். ஒரு மகன் மனோகரன் டென்மார்க்கில் உள்ளார்.





பார்வதியம்மாள் உயிரிழந்ததை அவரது மகன், மகள்களிடம் தெரிவித்துவிட்டதாகவும், இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறவினர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் காலமானார்.





மலேசியாவில் உறவினர் வீட்டில் வசித்து வந்த பார்வதியம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவர் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார். இதனால் சிறிது காலம் அவர் கொழும்பில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து வல்வெட்டித்துறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். வல்வெட்டித் துறை பகுதிதான் பிரபாகரனின் சொந்த ஊராகும். இந்த இடம் யாழ்ப்பாணத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.





நாளை , அவரது இறுதி சடங்குகள் நடக்க விருக்கின்றன... ஒரு மாவீரனைப் பெற்ற தாயின் ஆத்மா சாந்தியடைய , மனதார இறைவனை வேண்டுவோம்..





No comments:

Post a Comment