Tuesday, January 4, 2011

இந்தியாவில் பிறந்த அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்:விழிமின் எழுமின்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாடு மாநிலம்,கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்த கேந்திரம் ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல் என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டது.அந்த புத்தகத்தை 1992 ஆம் ஆண்டில் எனது கல்லூரி நூலகத்தில் படித்தேன்.ரொம்ப பழைய தாள்கள், படிக்க படிக்க நம்மை பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயன் என்னவெல்லாம் செய்தான்? அப்படிச் செய்வதற்காக அவன் செய்த பிராடுத்தனங்கள் என்னென்ன?அதை நமது முன்னோர்கள் எதிர்கொள்ள முடியாமல் எப்படியெல்லாம் தவித்தார்கள்? என்பதைப் பற்றி விரிவாகவே விவரிக்கிறது.இந்தபுத்தகத்தை இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு கிறிஸ்தவரும்,இஸ்லாமியரும்,இந்துவும்,சீக்கியரும்,புத்த மதத்தவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.



ஒரு நல்ல புத்தகம் வெறும் மங்குணியைக் கூட சிறந்த சிந்தனையாளராக மாற்றிவிடும் என்பதை இந்த புத்தகத்தை வாசித்தப்பின்னர்தான் உணர்ந்தேன்.ஆம்! கி.பி.2000 வரையிலும் நான் ஒரு மங்குணிதான்.ஏனெனில்,நமது கல்வித்திட்டம் அப்படித்தான் நம்மை உருவாக்குகிறது.நமது அம்மா,அப்பா முட்டாள்கள்!! நமது தாத்தா பாட்டி ஒரு அப்பாவிகள்!!! நாம் இந்தியாவில் பிறந்ததே மகா பாவம் என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரின் மனதிலும் உருவாகுவதற்கு நாம் படிக்கும் பள்ளிக்கல்வியும்,பட்டப்படிப்புமே காரணம்.



ஆனால்,நிஜத்தில் இது திட்டமிட்ட வடிகட்டின பொய் என்பதை உணரவே மூன்று வருடங்கள் ஆயின.இதை உணரவைத்த முதல் புத்தகம் இந்த புத்தகமே.பின்னர்,இந்தப் புத்தகத்தின் தலைப்பு ஹிந்து ராஷ்டிரத்திற்கு அறைகூவல் என்பதை விழிமின்;எழுமின் என்று மாற்றியமைப்பட்டது.இந்தப் புத்தகம் முழுவதுமே சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களின் தொகுப்பாக இருக்கிறது.இந்த தொகுப்புக்களை சுவாமி விவேகானந்தர் அவர்கள் உருவாக்கிய ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷன் மற்றும் அதன் வெளியீடுகள் பல ஆண்டுகளாக வெளியிட வில்லை என்பது தெரிந்தது.



இந்தபுத்தகத்தை ஒரு முறை வாசித்தால்,நமது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.நமது முன்னோர்கள் மாபெரும் சாதனையாளர்கள்,நாம் அதை விட சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் உருவாகும்.தற்போது இந்த புத்தகத்தின் விலை ரூ.45/-

கிடைக்குமிடம் விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்,கன்னியாக்குமரி.

வேறு இடங்களில் இது கிடைப்பதில்லை.இதன் இணையதளத்தின் முகவரி மூலமாகவும் வாங்கலாம்.

No comments:

Post a Comment