Wednesday, January 5, 2011

வத்தலக்குண்டு : எதையுமே வித்தியாசமாக பார்த்து,சிந்திப்பது இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதுவும் சவாலான விஷயங்களை செய்வது "அல்வா' சாப்பிடுவது மாதிரி. ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு ரோடு வழியாக 1,500 கி.மீ.,"ஸ்கேட்டிங்'கில் வருவதென்பது சாதாரண காரியம் இல்லையே.ஆந்திரா ஐதராபாத் அருகே ஹூப்ளிஹில்ஸில் நவ., 6ல் மாலை அணிந்த கன்னிச்சாமி ரகுவீர் (25), டிச.,22ல் சபரிமலைக்கு புறப்பட்டார். கடுமையான விரதம் இருந்து வழக்கம்போல பஸ்சில் வராமல் "ரோலர் ஸ்கேட்டிங்' மூலம் செல்ல தயாரானார். முதன் முறையாக வருவதால் வழிகாட்டியாக குருசாமி சுரேஷ் (30) சைக்கிளில் வருவதற்கு ஒப்புக்கொள்ள பயணத்தை தொடர்ந்தனர். மெகபூப்நகர், கர்னூல், அனந்தாபூர்,பெங்களூரு, ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக நேற்று பகல் 2க்கு சரணம் ஐயப்பா கோஷத்துடன் வத்தலக்குண்டை அடைந்தனர்.















பயணம் குறித்து ரகுவீர் கூறும்போது, ""மாணவர்களுக்கு நடனம், கராத்தே கற்றுத் தருகிறேன். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் 700 கி.மீ., ஆந்திராவுக்குள் "ஸ்கேட்டிங்' கில் சுற்றி விருது வாங்கினேன். எனக்கு பிடித்த, ஐயப்பனை தரிசிக்க "ஸ்கேட்டிங்'கில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதனால் வந்தேன். இவ்வளவு தூரம் இதுவரை யாரும் "ஸ்கேட்டிங்'கில் வரவில்லை. கின்னஸ் சாதனைக்கு முயற்சி எடுத்து வருகிறேன்' என்றார்

No comments:

Post a Comment