Friday, January 14, 2011

அன்னதானத்தின் மகிமைகள்:மறு விளக்கம்

எவ்வளவோ ஆன்மீகப்புதிர்கள் நமது இந்து தர்மத்தில் இருக்கின்றன.அவைகள் பெரும்பாலும் ஜோதிடக்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளன.அப்படி இணைக்கப்பட்டுள்ளவைகளை பாமர மக்களுக்கும் புரியும்விதமாக வெளிப்படுத்துவது நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் பொறுப்புக்களில் ஒன்று.



நமது ஊரில் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் உத்திரப்பிரதேசமாநிலத்தில் இருக்கும் சிவபூமியான காசியில் ஒரே ஒரு நாள்(மூன்று வேளை) அன்னதானம் செய்தால்,கிடைத்துவிடும்.



காசிக்கு நாம் சென்று,அங்கேயே ஒரு வருடம் வரை தங்கி,அந்த ஒரு வருடம் முழுவதும்(ஒரு நாளுக்கு மூன்று முறை வீதம்) அன்னதானம் செய்தால்,எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதே அளவு புண்ணியம்,நாம் நமது தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகில் இருக்கும் திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.எனவே, வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளிலிருந்து வரும் அன்பர்கள் எப்போது அண்ணாமலைக்குச் சென்றாலும்,அங்கே ஒரு நாளுக்கு மூன்று முறை அன்னதானம் செய்வது அவசியம்.



துவாதசி திதியன்று திரு அண்ணாமலையில் ஒரே ஒரு நாள் அன்னதானம் செய்தால்,காசியில் நாம் வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தைப் பெறுகிறோம்.மேலும்,அப்படி அன்னதானம் செய்தவர்,தனது வாழ்நாள் முழுக்க அன்னதானம் செய்த புண்ணியத்தையும் அடைகிறார்.மற்றும் பிறாவத நிலை எனப்படும் முக்தியை அடைகிறார் என அருணாச்சல புராணம் தெரிவிக்கிறது.



ஒரு தமிழ் மாதத்தில் இரண்டு முறை துவாதசி திதி வருகிறது.பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தவர்கள்,நேரம் கிடைக்கும்போதெல்லாம் துவாதசி திதி பார்த்து அண்ணாமலை சென்று அன்னதானம் செய்துவரலாம்.அன்று கிரிவலம் செல்லாமலும் கூட அன்னதானம் செய்யலாம்.



16.1.2011 ஞாயிற்றுக்கிழமையன்று காலை மணி 8.06 முதல் மறுநாள் 17.1.2011 திங்கள் காலை மணி 8.00 வரையிலும் துவாதசி திதி வருகிறது.எனவே, விடுமுறையில் இருக்கும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு,உங்களது கர்மவினைகளை அழித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.



ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment