Friday, January 8, 2010

தமிழ் வெப்துனியாவில் வெளிவந்த ஒரு முக்கிய செய்தி

ஒரே நேரத்தில் சீனா, பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் எதிர்கொள்வோம்: விமான தளபதி
வியாழன், 7 ஜனவரி 2010( 20:10 IST )

ஒரே நேரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியா மீது போர் தொடுப்பது மிக அசாதாரணமானது, ஆனால் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டால் ஒரே நேரத்தில் இரு நாடுகளுடனும் போர் புரிய முடியும் என்று இந்திய விமானப்படையின் கிழக்குக் கட்டளைத் தளபதி கூறியுள்ளார்.

மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் செய்தியாளர்களுடன் பேசிய இந்திய விமானப்படையின் கிழக்குக் கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் கிஷன் குமார் நெளஹார், “சீனா, பாகிஸ்தானுடன் ஒரே நேரத்தில் போர் ஏற்படும் சாத்தியம் அதிகமில்லை. ஆனால் அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டால், முழுமையாக அதனை எதிர்கொண்டு போர் புரிய தயாராகவே இருக்கிறோம்” என்று கூறினார்.

ஒரே நேரத்தில் இரு நாடுகளுடனும் போர் புரியும் நிலை இந்தியாவிற்கு ஏற்படுவதை பன்னாட்டு இராஜ தந்திர அழுத்தம் தடுத்துவிடும் என்று கூறிய ஏர் மார்ஷல் கிஷன் குமார் நெளஹார், அதையும் மீறி அப்படி ஒரு போர் ஏற்பட்டால், ஒரு பக்கத்தில் தற்காப்பாகவும், மறுபுறத்தில் தாக்குதல் முறையிலும் போர் புரிவோம் என்று விளக்கினார்.

இந்தியாவின் இரு முனைகளிலும் போர் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ளக்கூடிய, வேகமாக இடம் மாறும் போர்க் குழுக்கள் இந்தியப் படையில் உள்ளதென்று இராணுவத் தளபதி தீபக் குமார் கூறியதை பிரதிபலித்த ஏர் மார்ஷல், “அப்படிப்பட்ட சூழலில் விமானப் படையின் ‘ஆற்றல் பெருக்குப் படைகள்’ செயல்படும். அவை ஒரே நேரத்தில் ஒரு முனையில் தற்காப்புப் போரிலும் மறுமுனையில் தாக்குதலிலும் ஈடுபட்டு தேசத்தை காப்பாற்றும் வல்லமை பெற்றவை” என்று கூறினார்.

ஆயினும், சீனா உருவாக்கிவரும் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணைகளும், தானியங்கி தாக்குதல் கண்காணிப்பு விண் வாகனங்களும் அச்சுறுத்தல்களே என்று கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
நன்றி:தமிழ் வெப்துனியா 8.1.2010

No comments:

Post a Comment