Monday, January 4, 2010

ஐயப்ப பக்தர்களே! ஒரு உண்மையை உணருங்கள்

ஐயப்பனின் தோழர் வாபர் என்பது முழுப்பொய்

ஐயப்பனின் தோழனாக வாபரைச் சொல்லுகிறார்கள்.ஐயப்பனின் வரலாறு கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பழமையான காலமாகும்.
ஆனால், வாபரின் மதம் இஸ்லாம்.இஸ்லாம் தோன்றி, சுமார் 1500 ஆண்டுகள்தான் ஆகின்றன.
1500 ஆண்டுகளுக்குள் தோன்றிய ஒருவன் வரலாறு கணக்கிட முடியாத கலியுகக் கடவுளான ஐயப்பனின் தோழனாக இருந்தான் என்பது நம்பக்கூடிய பொய் அல்ல.(மகாத்மா காந்தியும் நானும் டீக்கடையில் சந்தித்தோம் என்று நான் சொன்னால் அது உண்மையாக இருக்குமா? மகாத்மா காந்தி கி.பி.1800களின் பிற்பாதியில் பிறந்தார்.நானே கி.பி.1980 ஆம் ஆண்டுதான் பிறந்தேன்)

ஐயப்பனின் தோழன் வாபர் என்று சொல்லி நம்மவர்களை நம்பவைத்து, ஐயப்ப பக்தர்கள் உண்மை என நினைத்து காணிக்கைகளை அள்ளிக் கொடுக்கும்படி செய்திருக்கிறார்கள்.

பொருளே தெரியாமல் ஐயப்பனின் பஜனைகளில்,
‘இலாஹி இல் அல்லா ஐயப்பனின் தோழர் வாபர் அல்லா’ என பாடுகிறோம்.இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

அல்லாவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை (இலாஹி இல் அல்லா) என்பதாகும்.

ஐயப்பனை முழு முதற்கடவுளாக வணங்க, மாலை போட்டு 41 நாட்கள் விரதமிருந்து விட்டு,
“ அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று பாடினால் எப்படி?
ஐயப்ப பக்தர்களே சிந்தியுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

1 comment:

  1. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    ஏன் , எத்தனை முறை சொன்னாலும்
    நம் மக்களுக்கு இது புரிய
    மாட்டேங்கிறது.
    எத்தனையோ பேர் ஐயப்பனுக்கும்
    பாபருக்கும் சம்மந்தம் இல்லை
    என்று விளக்கமளித்தும்-இன்றும்
    அந்த பாபர் வழிபாடும்,
    பேட்டைத் துள்ளலும் நடக்கத்தான்
    செய்கிறது.

    ReplyDelete