Tuesday, January 12, 2010

சுதேசிச் சிந்தனைகள்:2

சுதேசிச் சிந்தனைகள்:2 பாரதத்தின் பெருமைகள்

அரசியல் சுதந்திரம் வாங்கிய போது பாரத்தில் 6,00,000 கிராமங்கள் இருந்தன.தற்போது 3,50,000 கிராமங்கள் தான் உள்ளன.ஒவ்வொரு கிராமமும் சுயச்சார்புள்ள பொருளாதாரக்குடியரசாக இருந்தது.
இந்த சுயச்சார்புக்குடியரசை சிதைப்பதில் பிரிட்டன் முழுமையாக வெற்றி பெற வில்லை;ஒரு வேளை அப்படி வெற்றி பெற்றிருந்தால், தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தீவிரவாத அமைப்பில் இருந்து போராடியிருப்போம்.

ஒரு குடும்பத்துக்குத் தேவையான அரிசி,கோதுமை,மைதா,பயறு வகைகள், காய்கறிகள், ஆடைகள்,நகைகள்,துணிமணிகள், சொகுசுப்பொருட்கள் என அனைத்துமே அந்த குடும்பம் வாழும் கிராமத்திலேயே கிடைத்துவந்தது.சுமார் 20,000 ஆண்டுகளாக!!!800 ஆண்டுகளாக இந்தியாவைக் கைப்பற்றப் போராடிய இஸ்லாமிய அரசுகள்,மன்னர்களால் கூட இந்த கிராமீய சுயச்சார்புப்பொருளாதாரத்தை சிதைக்க முடியவில்லை.
அதே சமயம்,நமது பாரதத்தில் மட்டும் 4,00,000 அரிசி ரகங்கள் நாம் சுதந்திரம் வாங்கும் வரை புழக்கத்தில் இருந்தன.பசுமைப் புரட்சி என்ற பெயரில் அமெரிக்க ஐரோப்பிய உரக்கம்பெனிகள் 3000% வளர்ச்சி அடைய இந்தியாவின் அறிவுஜீவிகள் வழிசெய்தனர்.பசுமை புரட்சி துவங்கும் வரை பாரதத்தில் 2,00,000 அரிசி ரகங்கள் இருந்தன.ரசாயன உரங்கள் வந்தன.18,000 விதமான விவசாய உறுதுணைதரும் சிறுபூச்சியினங்கள் சுவடுகளின்றி அழிந்தன.உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம்.
அதே சமயம்,இன்று 99 % சிசேரியன் பிறப்புகளுக்குக் காரணமும் இந்த ரசாயன உரங்களால் வளர்ந்து ரசாயன உரங்களுடன் சாப்பிடும் நமது உணவுப்பொருட்களே!!! இது பற்றி விரிவாக பிறகு.



150 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு ஒரே மாதிரியான மண்ணும்,தண்ணீர்குணமும் இருந்தன.அதற்குத்தகுந்தாற்போல,வட்டார விவசாயக்கருவிகள் புழக்கத்தில் இருந்துவந்தன.100 வயதைக்கடந்து வாழும் மனிதர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு கிராமத்திலும் 25% அளவுக்கு இருந்தது.வீட்டுக்கு ஒரு ஜோதிடர் இருந்தார்.


கிராமங்கள் சுயச்சார்புடன் திகழ்ந்ததால், மன்னனுக்கு பாதுகாப்புத் தருவதைத் தவிர வேறு வேலை இல்லாமலிருந்தது.எனவேதான், தமிழ்நாட்டில் சுமார் 36,000 பெரிய கோவில்கள் இன்று(பல ஆயிரம் ஆண்டுகள் வயதை உடையவை) உயிர்வாழ்கின்றன.ஆம்! கோவில் கட்டுவதை தனது கடமைகளில் ஒன்றாக அக்கால தமிழக மன்னர்கள் கொண்டிருந்தனர்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற அளவுக்கு ஆராய்ச்சி செய்யும் எண்ணம் மதுரை மன்னனுக்கு இருந்தது.

இன்றோ, நம்மிடம் இருப்பவை 300 அரிசி ரகங்கள் மட்டுமே!ஆதாரம்:உங்கள் பகுதியில் வாழும் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், இயற்கை விவசாயம் செய்வோர் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்.முழு விபரங்கள் கிடைக்கும்.

விவசாயத்தில் 10,000 வருடப் பாரம்பரியமும்,அனுபவமும் இருந்த நாம்,வெறும் 100 வருடங்களில் அந்த அனுபவத்தொகுப்பை மெக்காலே கல்வித்திட்டம்,பேப்பரில் பி.எஸ்.ஸி., அக்ரி படித்ததால் இழந்தோம்.

இன்று,2010 ஆம் ஆண்டில் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யுமளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம்.உணவுப்பொருட்களில் நாம் தன்னிறைவை எட்டாவிட்டால், நாம் சோமாலியா ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில்,நமது மக்கள் தொகை 106 கோடிகளாகும்.உலகில் உள்ள எல்லா நாடுகளிடமும் அரிசி, கோதுமை வாங்கினாலும்,அப்படி வாங்கி,கப்பலில் நமது இந்தியத்துறைமுகங்களில் இறக்கி,மத்திய அரசின் உணவுக்குடோன்களுக்குக் கொண்டு சென்று, ரேஷனில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுக்க எவ்வளவு செலவாகுமோ,அது நாம் உணவில் மொத்தத் தன்னிறைவை எட்டும் செலவை விட மூன்று மடங்கு அளவாகும்.
ஆக, உலக வங்கி, அமெரிக்கா,சீனாவின் சதி,பாகிஸ்தானின் தீவிரவாதம் இத்தனையையும் மீறி ரொம்ப உஷாராக இல்லாவிட்டால், பசி இந்த நாட்டின் தேசிய அடையாளமாகிவிடும்.

No comments:

Post a Comment