Friday, January 8, 2010

இலவசமாக வீடு கட்டித்தரும் மாமனிதர் சாய்ராம் பட்,காசர்கோடு,கேரளா

காசர்கோட்டில் ஒரு மகாத்மா சாய்ராம் பட்

கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோட்டில் சாய்ராம் பட் என்பவர் இருக்கிறார்.இவரின் இயற்பெயர் கே.எம்.கோபால கிருஷ்ணபட் ஆகும்.விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த இவரது பண்ணையில் தென்னை,ரப்பர், முந்திரி,பாக்கு,கோக்கோ உள்ளிட்ட பலவகையான மரங்கள் இருக்கின்றன.இவர் ஆயுர்வேத வைத்தியரும் கூட.
விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம், வைத்தியத்திலிருந்து கிடைக்கும் வருமானம்,பூஜை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் போன்றவற்றை ஏழை எளிய மக்களுக்குச் செலவிட்டு வருகிறார்.

71 வயதான இவர் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்.ஏழை,எளிய மக்களுக்காக இதுவரை 148 வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளார்.
ஒரு வீடு கட்ட ரூ.50,000/-செலவாகியுள்ளது.இதற்காக யாரிடமும் இவர் நன்கொடை வாங்கியதில்லை.

ஒவ்வொரு வீடும் கேரள பாரம்பரிய முறைப்படி ஓடு வேயப்பட்டுள்ளது.ஒவ்வொரு வீட்டிலும் கூடம்,சமையல் அறை,படுக்கையறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பல்வேறு ஜாதி மதத்தைச்சேர்ந்தவர்களுக்கும் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.7.5.2009 அன்று 7 வீடுகளை கேரள வடக்குப்பகுதி ஐ.ஜி.சாந்தாராம் பயனாளிகளுக்கு வழங்கினார்.காசர்கோடு மாவட்டம் படியடுகா அருகில் உள்ள சித்தங்கோலி கிராமம் சாய்ராம் பட்டின் சேவையால் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

“கடவுளை வழிபட யாரும் புனிதத் தலங்களை நாடிச்செல்ல வேண்டியதில்லை.மனித குலத்திற்கு உண்மையாகத் தொண்டு செய்தலே போதுமானது” என்கிறார் சாய்ராம் பட்.
நன்றி:விஜயபாரதம்,பக்கம் 33, 30.1.2009

No comments:

Post a Comment