Tuesday, November 20, 2012

சபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங்கிரஸ் அரசு!!!


ஆந்திரவில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதமிருக்கும் காவல் துறையினர் தாடிவளர்க்க, மொட்டை அடிக்க, கருப்பு உடை அணிய கூடாது என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தனது இந்து விரோத முகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு காட்டியுள்ளது

ஆந்திராவில் பணியில் இருக்கும் காவல் துறையினர் தாடி வளர்க்ககூடாது, மொட்டையடிக்க கூடாது, ஷூ அணியாமல் இருக்க கூடாது, காக்கி உடை தான் அணியவேண்டும் என காவல் துறைக்கு மெமோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

இந்த புதிய கட்டுப்பாடு ஆந்திர காவல் துறை மற்றும் இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . ஆனால் காவல் துறையோ , சபரிமலை ஐயப்பனுக்கு விரதமே இருக்கக்கூடாது என்பது நோக்கமல்ல..
அப்படி விரதம் அனுசரிப்பவர்கள் முறையாக விடுப்பு வாங்கிவிட்டு போகலாம் என சப்பை கட்டு கட்டுகிறது.அதாவது விடுப்பில் போகவேண்டும் என்றல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் லீவு எடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இதன் மூலம் இந்த தடை யாரையோ மகிழ்ச்சி அடைய வைக்க எடுக்க பட்டதாகவே தோணுகின்றது . இந்திய இராணுவத்தில் சீக்கியர்கள் தங்கள் மத கோட்பாடுகளின் படி தாடி ,தலைப்பாகை அணிந்து கொள்ள அனுமதி உண்டு. ஏன் அமெரிக்காவிலேயே சீக்கியர்கள் தங்களது மதச் சின்னத்தை அணிய அனுமதி உண்டு. நிலைமை இப்படி இருக்க ஆந்திர அரசின் இந்த புதிய உட்ச்சொருகள் கட்டுபாடுகள் கண்டிக்க தக்கது.நன்றி:தமிழ்த்தாமரை

No comments:

Post a Comment