Tuesday, November 29, 2011

GOOGLE GOOGLE THANKS to PSP VIDIYAL








எனது மானசிக குரு "ஜோதிட தந்தை-ஆன்மிக அருளாளர்" பெரியவர்அமரர் டாக்டர்.பி.எஸ்.பி அய்யா அவர்கள் முதன்முறையாக உலகத்திற்கு அறிவித்த சூட்சமமான- திருவண்ணாமலை குபேர கிரிவலம் , இவ்வருடம்  நவம்பர் 23 அன்று நடைபெற்றது.


 திருவண்ணாமலை ஸ்தலத்திற்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குபேர சன்னதிக்கு ஒரே சமயத்தில் கூடுதலாய் வந்திருந்த காரணத்தினால் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. 

அமரர் டாக்டர்.பி.எஸ்.பி அய்யா அவர்களின் மகனும் ,பி.எஸ்.பி .விடியல் குழும தலைவருமான டாக்டர்.விஜய்பாலா பி.எஸ்.பி அவர்கள் ஏற்கனவே 'அறக்கட்டளை நிர்வாகத்திடம்' தமது தலைமையில் குபேர சன்னதியில் நடைபெறவிருக்கும் பூஜை தொடர்பாய் - பக்தர்களுக்கு கூடுதல் ஏற்பாடுகளை செய்துதரும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தும்கூட , எதிர்பாராத மிகுதியான கூட்டம் காரணமாய் அனைத்து தரப்பினரும் திணறிபோயினர்...!! 

பக்தர்கள் பொறுமையுடனும் ,அமைதியுடனும் தங்களது பிரார்த்தனைகளை குபேர பெருமானிடம் முன்வைத்து அமைதியை கடைபிடித்தால் மட்டுமே 'முழுமையான இறையருளை' உள்வாங்கிக்கொள்ள இயலும்  என்று பல செய்திகளையும் உதாரணங்களுடன்  டாக்டர்.விஜயபாலா  பி.எஸ்.பி அவர்கள் பக்தர்கள் முன்பு உரையாற்றி பகிர்ந்துகொண்டார்  . 

இலட்சகணக்கான வாசகர்களையும் ,பல்லாயிரக்கணக்கான ஜோதிட மாணவர்களையும் பெற்ற (யுனிவெர்சல் ரிசர்ச் அகாடமி /பி.எஸ்.பி யின் விடியல் மாத இதழ் நிறுவனர்) பெரியவர்
அமரர் பி.எஸ்.பி அய்யா அவர்கள்,பல வருடங்களுக்கு முன்பு தமது 'பி.எஸ்.பியின் விடியல்' மாத இதழ் மூலமாகவும் ,தமது நேரடி ஜோதிட மாநாடுகள்- சொற்பொழிவுகள் மூலமாகவும் & பல பத்திரிக்கைகள் மூலமாகவும் அனைவரும் பயன் அடையவேண்டி  சேவை மனப்பான்மையுடன் வெளிப்படுத்திய குபேர கிரிவலம் சூட்சமத்தை ,அடியேனும்- நாங்களும் சேவை மனப்பான்மையுடன் இங்கு அனைவருடனும் பகிர்ந்துகொண்டோம் ...!!



சேவை ,இறைத்தொண்டு போன்றவற்றை போதித்த எனது மானசிக குரு "ஜோதிட தந்தை-ஆன்மிக அருளாளர்" பெரியவர் அமரர் டாக்டர்.பி.எஸ்.பி அய்யா அவர்கள் வழிநின்று தொண்டாற்றுவோம்...!!


 தொண்டு உள்ளத்துடன்  இறைவழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே சுபிக்ஷம் கிட்டும்...!!! 

அய்யா அவர்களுடைய மகன் திரு.டாக்டர்.விஜய்பாலா பி.எஸ்.பி அவர்கள் "குபேர கிரிவலம்" நிகழ்ச்சியில் அனைவர் முன்னிலையிலும்  அறிவித்தபடி,மாதந்தோறும் "மாதசிவராத்திரியில்" திருவண்ணாமலை ஈசனை வணங்கி வழிபடுதல் மற்றும் அன்னதானம் போன்றவற்றை அனைவரும் கடைபிடிக்கவும்.


வாழ்க வளமுடன் 












2 comments:

  1. does girivalam on every sivarathiri arranaged?

    ReplyDelete
  2. அருமையான தகவல். பகிர்விற்கு நன்றி. நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete