Friday, November 4, 2011

வாயை மூடு: சீன தூதர் மிரட்டல்


புதுடில்லி: சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் வெளியிட்டுள்ள அழைப்பிதழ் ‌ஒன்றில் ஏற்பட்ட பிழை குறித்து கேள்வி கேட்ட நிருபர்களிடம் வாயை மூடு என்ற பதில் கிடைத்துள்ளது. சீனாவை சேர்ந்த அரசு நிறுவனமான டி,பிஇ.ஏ. என்னும் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் சுமார் 2ஆயிரத்து 500 ‌கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்ய உள்ளது. முதல்கட்டமாக சுமார் 500கோடி ரூபாய் முதலீடு செய்யஉள்ளது. குஜராத் மாநில அரசுடன் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதற்கான விழா அழப்பிதழ் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. விழாவில் இந்தியாவுக்கான சீன தூதர் ஜாங்யான் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட இந்திய பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட விழா அழைப்பிதழில் இருந்த வரைபடத்தில் இந்தியாவில் அருணாசலப்பி‌ரதேசம் சீனாவுடனும், காஷ்மீர் பாகிஸ்தானுடன் உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, இதற்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என்றும் வாயைமூடு என்றும் பத்திரிகையாளர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினார் சீன ‌தூதர். மேலும் இது ஒன்றும் பெரிய விஷயமல்ல, இதனை நட்புரீதியாக தீர்க்க்க்கூடியதே என்றார்.
thanks:dinamalar 4.11.11

2 comments:

  1. படம் போட்டு காட்டுகிறார்கள் போல! அடுத்தவன் சொத்து கணக்கை வெறும் காகிதத்தில் எழுதி தனது சொத்து கணக்கு என காட்டுவது போல.

    ReplyDelete
  2. Shame on our indian government !! Especially congress ..

    ReplyDelete