Monday, November 14, 2011

ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் விரைவான ஜபப்பலன் பெற

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் அடுத்த கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இதில் விஜயாபதி கீழுர் என்ற இடத்தில் கடலில் இருந்து அரை பர்லாங்கு தூரத்தில் ஸ்ரீவிஸ்வாமித்ரமஹாலிங்கசுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது.17,50,000 ஆண்டுகளுக்கு முன்பாக,விஸ்வாமித்ர மகரிஷி அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட சிவாலயம் இது.சில நூறாண்டுகளுக்கு முன்பு,விஜயாபதி ஒரு மாபெரும் துறைமுக நகரமாக இருந்திருக்கிறது .இந்த விஸ்வாமித்ரர் மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவராகிய ஸ்ரீ விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.இங்கு வந்து வேண்டுபவர்களுக்கு,அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறியிருக்கின்றன.இந்த சன்னிதியினுள் ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ,இதுவரையிலும் உணரமுடியாத உணர்வுகள் உண்டாகின்றன.எனவே,ஆன்மீகக்கடல் வாசகர்களே,இந்த படத்தை பிரிண்ட் எடுத்து,நீங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது,இந்த படத்தின் முன்பாக (எதிராக உட்காராமல்,பக்கவாட்டில் அமர்ந்து) ஜபித்து வரவும்.விரைவான சிவ கடாட்சம் பெறவும்.ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment