Sunday, March 27, 2011

பணப்பிரச்னைகளைத் தீர்க்கும் குபேரலிங்க வழிபாடு




உங்களது தொழிலில் வெளியில் நிலுவையில் நிற்கும் பணம் அதிகமாக இருக்கின்றதா?

அல்லது

சேவை சார்ந்த தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு உழைத்தும் திட்டமிட்டபடி மாத வருமானம் அல்லது லாபத்தை ஈட்ட முடியவில்லையா?

அல்லது

குடும்பப்பிரச்னையால் உங்களுக்கு வர வேண்டிய பங்குச் சொத்து சிறிதும் கிடைக்காமலிருக்கின்றதா?

அல்லது

நேர்மையாக உழைத்தும் பணம் சேமிக்க முடியவில்லையா?

இவை அனைத்திற்கும் தீர்வாக ஒரு ஆன்மீகப்பெரியவர் சொன்ன ஆலோசனையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

ஒவ்வொரு பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் திரு அண்ணாமலையில் கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் குபேரலிங்கத்திற்கு அபிஷேகத்துக்குத் தேவையான பால்,பூக்கள்,நல்லெண்ணெய் தானமாகத் தரவேண்டும்.தந்து,உரியவர் அல்லது உரியவரது ரத்த உறவுகள் கலந்து கொள்ள வேண்டும்.இப்படி 24 நாட்கள்(வளர்பிறைப்பிரதோஷம்,பவுர்ணமி,தேய்பிறைப்பிரதோஷம்) தொடர்ந்து செய்து வர வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலமாக,வர வேண்டிய பணம்,கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து,உழைத்துக் கிடைக்க வேண்டிய லாபம் முழுமையாக வந்து சேரும்.

ஆனால்,ஆரம்பிக்கும் நாள் கண்டிப்பாக வளர்பிறை பிரதோஷமாக இருக்க வேண்டும்.

இந்த 24 நாட்களில் தொடர்ந்து குபேரலிங்கத்துக்கு வருகை தந்து இவ்வாறு வழிபாடு செய்யும் போது,எதிர்பாராத தடை(பெரியவர்களின் மரணம் முதலானவை) வந்தால் உரிய இடைவேளை விட்டும் செய்யலாம்.

உதாரணமாக,18 பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்கள் வரை பால் மற்றும் நல்லெண்ணெய் குபேரலிங்கத்துக்கு தானமளித்துவிட்டு,குபேரலிங்க சன்னதியில் நடக்கும் பிரதோஷ பூஜை மற்றும் பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொண்டு வந்திருப்போம்;19 வது நாளுக்குரிய குபேரலிங்க பூஜையில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டால்,ஒரு மாதம் அல்லது அவரவரின் ஜாதி வழக்கப்படி இடைவெளிவிட்டு மீதி 6 நாட்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

குபேரலிங்கத்து பிரதோஷபூஜை மற்றும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ளும்போது,குபேர பகவானின் காயத்ரி மந்திரம் மற்றும் மூல மந்திரங்களை மனதில் ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.கலந்து கொள்பவர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;முடிந்தால் மஞ்சள் பட்டாடையை அணிந்திருப்பது சிறப்பு.

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. வணக்கம்,
    நானும் ஒரு ஆன்மீக வலைப்பதிவரே!

    உங்களுடையது ஆன்மீகக்கடல்.என்னுடையது ஆகமக்கடல்.நானும் தங்களைப்போல blogspot ஐ நீக்கிவிட்டு aagamakadal.com என பெற விழைகிறேன்.அதற்கான விபரத்தினை தெரிவிக்கமுடியுமா?வெறும் .com என்பது மட்டுமே மாற்றமாக இருக்குமா?அல்லது வேறு ஏதேனும் கூடுதல் வசதி கிடைக்குமா?

    ReplyDelete