Saturday, March 5, 2011

நேற்று (மாசி அமாவாசை 4.3.11)ஓம்சிவசிவஓம் ஜபித்தீர்களா?




ஒரே நாளில் நாம் நமது பிரச்னைகள் தீர வேண்டும் என ஆசைப்படுகிறோம்.ஆனால்,நமக்கு வரும் பிரச்னைகள்,நாம் முற்பிறவியில் நாம் செய்த பாவங்கள்,பொறாமை,திமிரின் விளைவுகளே! எனவே, ஒரே நாளில் நமது பிரச்னைகள் தீராது.

எப்படி எறும்புகள் ஒரு பாறையின் மீது நடந்து,நடந்து அந்த பாறை தேய்கிறதோ,அதேபோல்,நாம் தினமும் ஒரு மணி நேரம் வீதம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதால்,நமது பிரச்னைகள் படிப்படியாக மட்டுமே தீரும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

உதாரணமாக,நாம் செய்திருக்கும் முற்பிறவிக் கர்மங்களின் விளைவு 450 கோடி டன் என வைத்துக்கொள்வோம்.இதன் விளைவாக,37 வயது வரை நமக்கு திருமணம் ஆகாமலிருக்கும்;அல்லது 100 கோடி ரூபாய் சொத்துக்கள் இருந்தாலும் குடும்பமே கோர்ட்,கேஸ்,என சுமார் 14 ஆண்டுகள் அலைய வேண்டியிருக்கும்;அல்லது தொழில் பார்த்து 1 கோடி ரூபாய் கடன் உருவாகும்;அல்லது திருமணமாகி ஓரிரு குழந்தைகள் பிறந்து அவைகளுக்கு 10 வயதாகும் முன்பே,கணவன் ஓரிடம்,மனைவி ஓரிடம்,குழந்தைகள் ஓரிடம் என தனித்தனியே சுமார் 7 ஆண்டுகள் வரையிலும் வாழ வேண்டியிருக்கும்;அல்லது உங்களது முற்பிறவிகர்மாவைப் பொறுத்து கர்ம நோய் அல்லது கடன் அல்லது எதிரி அல்லது அரசாங்க விரோதம் என ஏதாவது ஒரு தொல்லை நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.

கொஞ்சம் சீக்கிரமாக தீருவதற்காகத் தான்,தமிழ்மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,சிவராத்திரி,பிரதோஷம் முதலான நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்படி வலியுறுத்துகிறோம்.

நேற்று மாசி மாத அமாவாசை,வெள்ளிக்கிழமை,ராகுவின் நட்சத்திரமாகிய சதயம் இம்மூன்றும் ஒருங்கே அமைந்திருந்தது.4.3.11 மாசி அமாவாசையாகிய நேற்று நீங்கள் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்திருந்தால்,நீங்கள் எவ்வளவு தடவை ஓம்சிவசிவஒம் ஜபித்தீர்களோ,அந்த எண்ணிக்கை பெருக்கல் ஆயிரம் கோடி மடங்காக பெருகியிருக்கும்.

ஜோதிட அறிவியலின் படி,ஒவ்வொரு தமிழ்மாதமும் சூரியன் அடுத்த ராசியில் நுழைந்திருப்பார்.அப்படி நுழைந்த நாளில் அந்த ராசியில் நமது ஆத்மாக்காரனாகிய சூரியனின் பலம் பலமடங்கு அதிகமாக செயல்படும்.

அமாவாசையன்று ஆத்மாக்காரன் எனப்படும் சூரியனும்,மனக்காரன் எனப்படும் சந்திரனும் ஒன்று சேரும் நாள்.இந்த நாளில்,நாம் ஒருமுறை ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் பல கோடிமடங்கு ஜபித்தமைக்கான பலனைத் தரும்.இந்த நாளில்,நாம் முடிந்தவரையிலும் காலையில் ஒரு மணிநேரமும்,மாலையில் ஒரு மணி நேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிப்பது நன்று.

பவுர்ணமி நாளன்று சூரியனுக்கு நேர் ஏழாம் ராசியில் சந்திரன் நிற்கும்.சூரியனும் சந்திரனும் முழு சக்தியைப் பெறுவர்.எனவே,இந்த நாளிலும் நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மிகுந்த உற்சாகத்தோடு பல மடங்காக அதிகரிக்கும்.ஏனெனில்,மனக்காரனகிய சந்திரன் முழுபலத்தோடு இருப்பதால்,நாம் தெளிவான மனநிலையோடு இருப்போம்.

சூரியக் கிரகணம்,சந்திரக்கிரகணம் அதிக பட்சமாக இரண்டு மணிநேரமும் குறைந்த பட்சமாக 7 நிமிடமும் நாம் வாழும் பகுதியில் தெரியும்.அந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்துப்பாருங்கள்.உங்களை அறியாமலேயே வேகமாக ஓம்சிவசிவஓம் ஜபிப்பீர்கள்.இந்த கிரகண நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஒரு முறை ஜபித்தாலோ ஆயிரம் கோடி தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நமக்குக் கிடைக்கும்.



கலிகாலத்தில் பூஜைகள்,யாகங்கள் இவற்றினை செய்யும் போது பல மனிதர்களின் ஆதரவோடு செயல்பட வேண்டியிருக்கும்.அப்படிப்பட்ட சூழலில் அந்த பல மனிதர்களில் ஒரு சிலராவது உள்ளன்போடு,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு செயல்பட முடியாத நிலை இருக்கும்.எனவே,அவை ஓரளவுக்கு மேலாக நன்மைகளை ஒரே தடவையில் தருவதில்லை.(இது எனது சொந்தக் கருத்து அல்ல;ஆன்மீகப்பெரியவர்களின் கூற்று)

மந்திர ஜபத்துக்கும்,இறை நாமத்தை ஜபிப்பதற்குமே உடனடி பலன் கிடைக்கும் என கீதையில் துவங்கி,திருமூலர் வரை ஏராளமானவர்கள் விவரித்துள்ளனர்.எனவே, தினமும் ஒரு மணிநேரமும் முக்கிய நாட்களில் இரண்டு மணிநேரமும் ஓம்சிவசிவஓம் மந்திரம் ஜபிக்கவும்.

இப்படி நல்ல நாட்களில் அதிகமான நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக நமது முற்பிறவிகர்மாவின் அளவு 450 கோடி டன் என்பது 50 கோடி டன் என்ற அளவுக்கு குறைய நாம் குறைந்தது ஒராண்டு வரையாவது தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.

இந்த 450 கோடி டன் என்பது சும்மா உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒரு அளவீடு மட்டுமே!



பாவம் என்றால் என்ன?

பிறரை மனதால்,உடலால் நோகடிப்பது;ஏமாற்றுவது;வெறுப்பேற்றுவது;காயப்படுத்துவது;

இதுவே விரிவாக கருடபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.கலிகாலத்தில் காமம் அல்லது பணம் அல்லது சொத்து சார்ந்த பாவங்களைத் தான் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது.

3 comments:

  1. நன்றி
    உங்கள்பணி தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்!
    த.லக்சிதன்
    யாழ்ப்பாணம்

    ReplyDelete
  2. நன்றி
    உங்கள்பணி தொடரட்டும்.
    வாழ்க வளமுடன்!
    த.லக்சிதன்
    யாழ்ப்பாணம்

    ReplyDelete