Sunday, March 6, 2011

கேமத்துவ தோஷம் என்றால் என்ன?





பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.அப்படி உருவாகும் முன்பே,திடீரென சொத்துக்கள்,வசதிகள்,யோகங்கள் அனைத்தையும் இழந்துவிட்டால் அவர்களுக்கு கேமத்துவ தோஷம் இருக்கிறது என்று அர்த்தம்.

இதனால்,இவர்களின் தினசரி வாழ்க்கை ஏழ்மையில் இருக்கும்.பலருக்கு வேலை,திருமணம்,காதல்,அரசுப்பணி,நல்ல தொழில் வாய்ப்பு போன்றவை கடைசி நிமிடத்தில் கைகூடாமல் போய்விடும்.ஒரு வேளை உணவுக்காக போராட வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.சோற்றுக்காக போராடுவதே வாழ்க்கையாகப் போய்விடும்.

இவர்களின் பிறந்த ஜாதகத்தில் குருவை சனியோ,சனியை குருவோ பார்க்கும் விதமாக கிரகநிலை அமைந்திருக்கும்.சிலருக்கு குருவும் சனியும் ஒரே ராசியில் இருக்கும்.தற்போது 2008,2009,2010,2011 ஆம் ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிரக நிலை அமைந்துகொண்டே இருக்கிறது.இந்த நான்கு ஆண்டுகளிலும் சனியை குருவும் குருவை சனியும் நேர் ஏழாம் பார்வையாகப் பார்த்துவருகின்றனர்.

இவர்கள் முற்பிறவியில் ரகசியா,டிஸ்கோ சாந்தி,சிலுக்கு ஸ்மிதா,குத்துப்பாட்டு நடிகைகளின் வேலையைப் பார்த்திருப்பர்.

முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்.

ஜாக்கிரதை:இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.

தவிர ஷகீலா போன்றவர்களுக்கு மட்டும் இந்த தோஷம் ஏற்படும் என நினைக்காதீர்கள்.உங்களின் சொந்த காம அனுபங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்;நீங்கள் கேள்விப்பட்ட காம கிசுகிசுக்களையும் மறந்துவிடுங்கள்;உங்கள் தெருவில் நடைபெற்ற காம அவமானங்களை தெருவையும் கடந்து யார் யாருக்கோ இறக்கை முளைத்து பறக்கும்;உங்கள் அலுவலகத்தில் நடக்கும் முறையற்ற காம கூத்துக்களும் இதே நிலைதான்.இதுமாதிரியான சம்பவங்களில் ஈடுபடுபவர்களைவிட இவர்களைப் பற்றி தமது கற்பனையையும் கலந்து உரியவர்களை அசிங்கப்படுத்துவதில் ஒரு பரமசுகம் என நம்பும் தமிழ் மக்கள் அதிகம்.இவர்கள் அனைவருக்கும் கேமத்துவ தோஷம் ஏற்படும்.

மிகவும் கடுமையான கேமத்துவ தோஷம் ஒருவருக்கு காமத்துணையை வாழ்நாள் முழுக்கக் கிடைக்காமல்,ஏங்கியே சாக வைக்கும்.

கடுமை குறைந்த கேமத்துவ தோஷம் சில ஆண்டுகளுக்காவது கணவன் மனைவி பிரிவினையை உருவாக்கும்.

மிகக் குறைந்த கேத்துவ தோஷம்,எந்த வித காமக் குற்றங்கள் செய்யாமலேயே ஒழுக்கமற்றவர் என்ற பெயரை உருவாக்கும்.நான் கேள்விப்பட்டவரையில்,தனது மகனையும்,மகளையுமே ஒழுக்கங்கெட்டவன்/ள் என எல்லோரிடமும் தூற்றும் அம்மா,அப்பாக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

இப்படி தரங்கெட்ட அம்மா,அப்பா உருவாக பல காரணங்கள் உண்டு.அதில் ஒரு முக்கிய காரணம் டிவியில் வரும் பிரபல நெடுந்தொடர்கள் தான்.எப்படி எல்லாம் ஒருவரது பெயரைக் கெடுப்பது? என்பதை சொல்லித்தருகின்றன.

16 comments:

  1. //முற்பிறவியில் தனது அழகு,கவர்ச்சியால் ஏராளமானவர்களை ஏங்க வைத்தவர்களுக்கு இப்பிறவியில் கேமத்துவ தோஷம் இருக்கும்//
    முற்றிலும் தவறான கருத்து.. நாம் அழகாக இருப்பதைப் பார்த்து பலர் ஏங்குவார்கள், அதற்காக நாம் பொறுப்பேற்க முடியுமா,,நமக்கு தோஷம் வருமா,,,????எந்த வகையில் நியாம் சொல்லுங்கள்..

    ReplyDelete
  2. //இப்பிறவியில் காம வெப்சைட்டுகள்,வலைப்பூக்கள்,மின் அஞ்சல் குழுக்கள் நடத்துபவர்களுக்கு இதே நிலைதான் அடுத்த பிறவியில் ஏற்படும்.//
    அப்போ உனக்குத் தா முதல் தோஷம்,,,

    ReplyDelete
  3. அழகாக இருப்பது தவறில்லை;அவர்களைப் பார்த்து ஏங்குவதும் தவறில்லை;பதிவினை கவனமாக வாசிக்கவும்.
    தனது அழகினை,கவர்ச்சியாக்கும் கவர்ச்சி நடிகைகள்,பொது இடத்தில் தனது அந்தரங்க உறுப்புக்களை அரைகுறையாகவோ,முழுமையாகவோ காட்டி ஏங்க வைப்பவர்களுக்குத்தான் இந்த தோஷம் உண்டாகும்.

    ReplyDelete
  4. கலிகாலத்தில் மற்றவர்களை தவறான வழிகாட்டுபவர்களே அதிகம்.இதுபற்றி பலருக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே புராதன புராணங்கள்,நூல்கள்,புத்தகங்கள்,ஸ்மிருதிகள்,ஜோதிட உபதேசங்களைத் தேடி அதில் அனைவருக்கும் தேவையான பொதுவான விஷயங்களை வெளியிட்டால். . .

    ReplyDelete
  5. ஏதோ ஒரு பிறவியில் செய்த பிழையால் ஒருவருக்கு இந்த தோஷம் உள்ளது என்பதை அறிந்தபின்,இப் பிறவியில் நல்லவராக வாழும் அவர் இந்த தோஷத்தால் வாடினால், இதிலிருநது விடு பட அவருக்கு என்ன பரிகாரம் உள்ளது ?

    ReplyDelete
  6. சரவணன்March 7, 2011 at 6:50 PM

    ஐய்யா, நான் நான் மீன லக்னம். மகர ராசி, திருவோண நட்சத்திரம்.
    நான்கில் செவ்,
    ஐந்தில் சூ,ரா
    ஆறில் புத,
    ஏழில் குரு,சுக்,சனி,
    பதின்னொன்றில் சந்த,கே. எனக்கு கேமத்துவ தோஷம் இருக்கோ. ப்ளீஸ் சொல்லுங்களேன்

    ReplyDelete
  7. வணக்கம், இந்த தோஷம் நீங்க பரிஹர்ரம்,ஜபம் ,மந்திரம் இருக்கிறதா, நன்றி

    ReplyDelete
  8. திரு.சரவணன் அவர்களுக்கு,இந்த கேமத்துருவ தோஷம் தீர ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை உங்கள் வீட்டில் செய்யுங்கள்.கேமத்துருவ தோஷம் நீங்கும்.

    ReplyDelete
  9. அன்புள்ள ஆன்மிக கடல் ஐயா,
    தாங்கள் ஒரு ஆன்மிக பற்று உள்ள சராசரி இளைஞன் . ஆனால் தாங்கள் கூறிய இந்த தோஷம் அந்த அளவுக்கு உண்மை இல்லை .
    தங்கள் கூறியதுபோல் ஞானம் வருவதற்கு வயது தேவை இல்லை .
    பெரும் செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்து,வாழ்க்கை என்றால் என்ன?எப்படி வாழ வேண்டும்? என்ற ஞானம் 22 வயது அல்லது 31 வயதுக்குள் ஏற்படும்.

    பல சித்த பெருமக்கள் தங்களின் முதுமை காலத்தில் தான் அவர்களுக்கு ஞானம் கிட்டியது.

    தங்களின் இந்த பதிவில் நடிகைகளை உதாரணம் காட்டியது மிகவும் தவறு, ஆன்மிக கடலில் இருந்துக்கொண்டு காமகடலை பற்றி எழுத கூடாது. பொதுவாக இறந்துபோன ஆத்மாக்களை பற்றி நாம் பேசுவதே தவறு, அப்படி இருக்க நாம் உதாரணம் காட்ட கூடாது.

    காமம் ஒன்றும் வெறுக்க தக்கது அல்ல அது முறைமுடையுடன் இருக்கும் போது. அக்கால ராஜாக்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்க்கும்போது , இன்றைய நிலையில் உள்ள மக்களே எவ்வளவோ தேவலாம் .

    நல்ல நிலையில் உள்ள நீங்கள் நல்ல முறையிலே வாழ்க்கையிலே முன்னேற வாழ்த்தும்.

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா -சென்னை.

    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  10. பாலா குருமுனி அவர்களே! தங்கள் கருத்து வரவேற்கத்தக்கதே!!
    கலிகாலத்தை காமமும்,பணப்பேராசையுமே ஆட்சிபுரிகிறது.ஆன்மீகக்கடலின் நோக்கமே தவறான வழியில் சென்று குடும்பங்களை சீரழிக்காமல் தடுப்பதே.
    இந்த கொடூரம் நிறைந்த கலியுகத்தில் கடன் இல்லாமல்,நோயில்லாமல்,எதிரி இல்லாமல்,கர்ம வினைகள் தாக்காமல் இருந்து,நிம்மதியாக மூன்று வேளை சோறு கிடைத்து வாழ்ந்தாலே,அதுவே கோடீஸ்வர வாழ்க்கை.இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு ஏங்கும் தமிழ்மக்கள் பல கோடிபேர்கள் இருக்கின்றனர்.
    ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் உண்மைத்தன்மையுடன் இருப்பவர்களைத் தேட வேண்டியிருக்கிறது.போலிகள் கார்ப்பரேட் கம்பெனிபோல் விளம்பரம் செய்து கடைவிரித்து மக்களை ஏமாற்றுகின்றன.(இதில் சிறந்த ஆன்மீக அமைப்புக்களும் உண்டு)
    ஜோதிடத்தில் பரிகாரம் செய்தே,திருமண மண்டபங்கள் கட்டி வசதியாக வாழும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.முன்னோர்களின் ஆசி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை போதிக்க ஆட்கள் இன்று குறைவு.இது போல,வலைப்பூ நடத்தி ஒரு சிலருக்காவது நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டினால்தான் உண்டு.
    யாருக்கெல்லாம் கேது மகாதிசை,கேது நட்சத்திர சார திசை வருமோ,அவர்களுக்கு ஞானம் கிடைக்கும்.
    நடிகைகளைத் தவிர, வேறு யாரை உதாரணமாகக் காட்டுவது.
    காமம் ஒரு பாவம் அல்ல என்பது நிஜமே.காமம் இன்று சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது.காமம் இல்லாமல் ஆன்மீகம் இல்லை.யாருக்கு காமத்தில் முழு திருப்தி கிடைக்குமோ,அவரே ஆன்மீகத்தில் ஜெயிப்பார் என்பதும் நிஜம்தான்.

    ReplyDelete
  11. ஆன்மீகக்கடல் எப்போதுமே ஆன்மீகக்கடல்தான் பாலா குருமுனி அவர்களே!
    நமது தினசரி வாழ்க்கையில் நம்மை மீறியோ,நமது சம்மதமின்றியோ காமம் குறுக்கிட்டு நமது லட்சியங்கள்,ஆசைகள்,நோக்கங்களை சிதைத்துவிடுகிறது.இதனால்,மனிதகுலம் வளர்ச்சி எத்தனை நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறது என பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன்.காமத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்ற சூட்சுமக்கலை தெரிந்துவிட்டால்,காமம் ஒரு பிரச்னையே கிடையாது.
    தினசரி செய்தித்தாளைப் பாருங்கள்.காமத்தால் பெற்ற குழந்தையைக் கொன்ற அம்மா,முறையற்ற உறவைப் பார்த்துவிட்ட தனது தங்கையைக் கொன்ற அக்கா/தனது குழந்தையைக் கொன்ற அப்பா என செய்திகள் வராத நாளே கிடையாது.
    நமது தலைவர்கள்,அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பிரச்னையே கிடையாது.அவர்களுக்கு தேர்தல்,வழக்கு மட்டுமே.கல்வித்திட்டத்தில் இதை சரி செய்யும் விதமாக ஒருவனும் உருவாக்குவது கிடையாது.இது சார்பாக நாம் நேரிலோ,போனிலோ விவாதிக்கலாம்.
    மனம் தரும் பணம் புத்தகத்தில் 12 ஆம் அத்தியாயம் படித்துவிட்டு,என்னைத் தொடர்பு கொள்ளவும்.

    ReplyDelete
  12. அன்புள்ள ஆன்மிகக்கடல் ஐயா,

    தங்களின் கருத்துகளை கண்டேன், மிக்க மகிழ்ச்சி .உங்களுடைய ஆர்வத்தை கண்டு பாராட்டுகிறேன்,

    ஏற்று கொள்ளமுடியாத கருத்துகள் :

    1)யாருக்கு காமத்தில் முழு திருப்தி கிடைக்குமோ,அவரே ஆன்மீகத்தில் ஜெயிப்பார் என்பதும் நிஜம்தான்.
    2)யாருக்கெல்லாம் கேது மகாதிசை,கேது நட்சத்திர சார திசை வருமோ,அவர்களுக்கு ஞானம் கிடைக்கும்
    3)நடிகைகளைத் தவிர, வேறு யாரை உதாரணமாகக் காட்டுவது.
    4)காமம் இன்று சர்வ சாதாரணமாகக் கிடைக்கிறது


    பிடித்த கருத்துகள் :
    1)"வலைப்பூ நடத்தி ஒரு சிலருக்காவது நிம்மதியான வாழ்க்கைக்கு வழிகாட்டினால்தான் உண்டு."
    2)"காமம் ஒரு பாவம் அல்ல என்பது நிஜமே"
    3)"மனிதகுலம் வளர்ச்சி எத்தனை நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறது என பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன்"
    4)"கல்வித்திட்டத்தில் இதை சரி செய்யும் விதமாக ஒருவனும் உருவாக்குவது கிடையாது."

    நடக்கும் உண்மைகள் :

    1)ஜோதிடத்திலும்,ஆன்மீகத்திலும் உண்மைத்தன்மையுடன் இருப்பவர்களைத் தேட வேண்டியிருக்கிறது.
    2)ஜோதிடத்தில் பரிகாரம் செய்தே,திருமண மண்டபங்கள் கட்டி வசதியாக வாழும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.
    3)முன்னோர்களின் ஆசி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதை போதிக்க ஆட்கள் இன்று குறைவு

    "மனம் தரும் பணம் புத்தகத்தில் 12 ஆம் அத்தியாயம் படித்துவிட்டு,என்னைத் தொடர்பு கொள்ளவும்." ----நாங்கள் படிக்கும் ஒரே புத்தகம் 'ஞான கோவை " மட்டும் தான்.
    முடிந்தால் அதை வாங்கி படிக்க முயற்சி செய்யுங்கள் .

    சித்தர்களின் எல்லா வல்லமையும் உங்களுக்கு கிடைக்கும்.

    http://gurumuni.blogspot.com/
    என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

    ReplyDelete
  13. kemathuruva yogam enbathum kemathuva thosham enbathum ontra allathu veru veruaaa?

    ReplyDelete
  14. பாலா அவர்களே! தாங்கள் வெறும் புத்தக அறிவோடு மட்டுமே கருத்து மோதலில் ஈடுபடுகிறீர்கள் என யூகிக்கிறேன்.

    ReplyDelete
  15. பாலா அவர்களின் கருத்துக்கள் மிகவும் அருமை

    ReplyDelete
  16. kemaththuva thosham 99% manithargalukku undu.

    ReplyDelete