Tuesday, September 14, 2010

மலர் மருத்துவம் என்றால் என்ன?

மலர் மருத்துவம் சுருக்கமான வரலாறு







இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் MBBS,IRCP,MRCS முடித்துவிட்டு,சில காலம் ஆங்கில மருத்துவச் சேவை புரிந்தார்.ஆங்கில மருத்துவமான அலோபதி ஏராளமான பக்கவிளைவை உருவாக்கியதால்,அவர் ஓமியோபதி மருத்துவப்பட்டம் பெற்றார்.


பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் மனமே என்பதை உணர்ந்ததால்,அவர் மலர் மருத்துவத்தைக் கண்டறிந்தார்.எந்த நோய்க்கும் மனமே மூலகாரணம்.மனதிலிருந்தே நோய்கள் ஆரம்பிக்கின்றன.எனவே,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமடைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.மனமகிழ்ச்சியானது உடலின் அனைத்துசெல்களுக்கும் பரவி,நோயாளி பரிபூரணகுணமடைகிறார் என்பதை தமது அனுபவத்தில் கண்டறிந்தார்.






இதனால்,மனதைச் சரிபடுத்தினால்,உடல் சுகமாகும் என்பதைக் கண்டறிந்தார்.மனதில் வேலை செய்து அதனைக் குணப்படுத்தும் மருந்து எது என்பதை கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.காடுகளில் கிடைக்கும் மரப்பட்டைகள்,இலைகள்,கனிகள்,காய்கள்,பூக்களை ஆராய்ந்து பார்த்தார்.டாக்டர் பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய பல நூல்களையும் வாசித்துப் பார்த்தார்.மலர்கள் மனிதமனங்களில் மாபெரும் மாற்றத்தை உருவாக்குவதைக் கண்டறிந்தார்.மனித மனத்தை ஒழுங்குபடுத்தும் மலர்களைத் தேர்ந்தெடுத்தார்.38 வகையான மருந்துகளைத் தயாரித்தார்.இம்மருந்துகள் மனதைச் சீராக்கும்போது உடல் நலம் மேம்படுகிறது.


நன்றி:ஹோமியோபதி ஒரு அறிமுகம் தொடர் ,எழுதியவர் டாக்டர் ஏ.ராஜகோபால்,வியாசர்பாடி,சென்னை.செல்:9444163153.


நன்றி:டாக்டர் பி.எஸ்.பி.யின் விடியல் மாத இதழ் பக்கம் 31,மார்ச் 2008.

1 comment:

  1. மலர் மருத்துவம் என்பது வேறு,அரோமா தெரபி (மண மருத்துவம்) என்பது வேறு.கவனிக்கவும்.
    இப்படிக்கு
    யாரோ

    ReplyDelete