Tuesday, September 21, 2010

திரு.மிஸ்டிக் செல்வம் :நமது ஆன்மீக வழிகாட்டி


தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்

கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படிப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார்.இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.
கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள்,சித்தர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும் பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார்.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்மம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.
40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாட்டுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங்குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.
திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத்தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.அகில உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.

திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர்’ ‘ஆன்மீகத்திறவுகோல்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார்.இவருடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கிடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம்,
ருத்ராட்சப் பிரயோகம்
மந்திரப்பிரயோகம்,
சங்குப்பிரயோகம்,
அஞ்சனப்பிரயோகம்,
யந்திரப்பிரயோகம்,
காலதோஷ நிவாரணம்,
வாஸ்துதோஷ நிவாரணம்,
பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமணி மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்றன:
1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்

2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்

3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்

4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்

5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்

6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்

இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையுடன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.அதை 5.2.2007 அன்று இந்திய ட்ரஸ்ட் ஆக்ட் 1882இன்படி பதிவு பதிவு எண்:433/2007 கீழ் நிறுவி பதிவு செய்துள்ளார்.

திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களின் எழுத்துக்களை ஒருமுறை வாசித்தால் /பேச்சினை ஒரு முறை கேட்டாலே நமது வாழ்க்கையில் நீண்ட காலப்பிரச்னைகள் தீருவதற்கான ஆன்மீக வழிமுறை அல்லது தீர்வு கிடைக்கும் என்பது எனது அனுபவ உண்மை!!!

No comments:

Post a Comment