Thursday, November 19, 2009

SELF RELIANCE QUESTION AND ANSWERS

சுதேசி கேள்வி பதில்:ஏப்ரல் 2008 சுதேசி செய்தி

1) சென்ற முறை ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர் இந்துக்கள் அல்லவா’ என கருணாநிதி ஒரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளாரே?

இந்து என்றால் திருடன் என்று கூறியவரும் கருணாநிதிதான்.இன்று தன் மகளை இந்து என்று கூறுபவரும் இவர்தான்.ஆக கனிமொழி . . .?

2) திபத் பிரச்னையில் சீனாவின் அடக்குமுறையை இந்தியா கண்டிக்காதது ஏன்?
நேருவின் குடும்ப அரசியலில் இருந்தும், அவரது கோணல் தேசிய அரசியலில் இருந்தும் நாள் இந்தியாவிற்கு நன்னாள்.அதுவரை நீங்கள் இதுபோல் கேட்பதும், நாங்கள் பதிலளிப்பதும் தொடரத்தான் செய்யும்.

3)இந்தியாவின் பிரதமராகத் தகுதியானவர் ராகுல்காந்தி என்று பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் கூறியிருக்கிறாரே?

ஆமாம்,ராகுல் மாதிரி ஓர் கத்துக்குட்டி சொகுசுப் பேர்வழி பிரதமராக இருந்தால்தானே இவர்கள் இஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ள முடியும்.அதனால் பிளேர் அப்படித்தான் கூறுவார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சுதேசி செய்தி ஆகஸ்டு 2009 இல் வெளிவந்தவை:

1)முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களை சோதனை செய்த அமெரிக்க விமான நிறுவனம் காண்டினென் டல் ஏர்லைன்ஸ் பற்றி?

தெரிந்ததே! எடுத்துக் கூறிய பிறகும் செய்திருக்கிறது.இது கண்டிக்கத்தக்கதே.நாமும் ஹிலாரி கிளிண்டனை சோதனை செய்யும் உரம் பெற்றவர்களாக மாறும்போது இது போன்ற பிரச்னை வராது.

2)ராமாயணத்தை தொடர்ந்து விமரிப்பேன் என்கிறார் கருணாநிதி?

நாளையே ராமன் எனக்கு விருப்பமானவனே எனவும் கூறலாம்.
சேதுப் பாலம் விஷயத்தில் அடிக்காத பல்டியா? எத்தனை சினிமாக்களில் சவால் விட்டு அடிவாங்குகிறார் வடிவேல்.அதுபோலத்தான் இதுவும்!

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

சுதேசிச் செய்தி:செப்டம்பர் 2008 கேள்வி பதில்

1)கனிமொழி ஹிந்திப் பண்டிட்டாமே!

ஹிந்தி ஒழிப்பு அவர்களுக்குக் கிடையாதா எனக் கேட்க வருகிறீர்களா அல்லது அந்த குடும்பத்தில் கல்வி முறையில் தமிழ்ப் பண்டிட் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்க வருகிறீர்களா?

3) ஒரிஸா கந்தமாலில் தொடரும் வன்முறை பற்றி?
40 ஆண்டு காலம் ஆசிரமம் அமைத்து கிறிஸ்தவ மதமாற்றத்தை தடுத்து மக்கள் சேவை செய்துவந்த 84 வயது ஹிந்துத்துறவி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.விளைவுதான் தொடரும் வன்முறை.
ஒரு பாதிரி கொலை செய்யப்பட்டபோது வானுக்கும் பூமிக்கும் குதித்த பத்திரிகைகள் இப்போது ஊமையாக. . .தேவைப்படும்போது ஹிந்துவை மட்டும் குறைகூறுவதால் ஏற்பட்ட கோபம் இது!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


சுதேசி செய்தி:மே 2008 கேள்வி பதில்

1)கடலின் மத்தியில் சென்று ராமர் பாலத்தில் வழிபாடு செய்கிறார்களா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனரே?

சூரியனையும், சந்திரனையும் வழிபடுபவர்கள் சூரியனுக்கும், சந்திரனுக்கும் சென்றா வழிபடுகிறார்கள்.அதற்காக சூரிய சந்திரர்களை அழிக்க முற்படலாமா?இது கேட்டவருக்கான பதில்.இனி வருவது கேள்விக்கான பதில்:1964 வரை தினசரி வழிபாடு அங்கு நடைபெற்று வந்துள்ளது.ராமர் பாலத்தில் தற்போது தீவுகளாய் விளங்கும் திட்டைகளில் 8 வது திட்டை ‘ராமர் திட்டை’ என்றே அழைக்கப்பட்டு அங்கு மக்கள் வசித்து வந்துள்ளனர்.இன்றும் பாலத்தை கடந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஸ்ரீராமர் பாலத்திற்கு “நீராட்டல்” எனும் பூஜை செய்துதான் அதைக் கடந்து செல்லுகிறார்கள்.
நீதிபதிகளே நிதானம் தவறினால். . .!



2) ‘ராமானுஜரைப் போல வைராக்கியத்தோடு கொள்கை மாறாமல் நமது அரசியல்வாதிகளும் இருந்திருந்தால் நாடு எவ்வளவு முன்னேறியிருக்கும்’ என முதல்வர் கருணாநிதி ‘தசாவதாரம்’ படவிழாவில் பேசி உள்ல்ளாரே?

ராமானுஜரை ஏற்றுக் கொண்டோம் என்றார்.பிறகு ‘திரும்பிப் பார்’ படத்தின் காட்சிகளை நினைவுகூர்ந்து ‘திருக்கோஷ்டியூர் கோயில் மதிலில் இருந்து கீழே விழுந்தவ்ர்’ என வரலாற்றில் பொய் கூறி கேலி செய்தார்.இப்போது அவரது கொள்கை வைராக்கியத்தை பாராட்டுகிறார்.என்னே நமது முதல்வரின் தேசபக்தியும் கொள்கைப் பிடிப்பும்!


3)வடமாநில தெய்வங்களைப் புறக்கணித்து, தமிழ் தெய்வங்களை மட்டுமே வணங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் சுயமரியாதைக் குரல் எழுப்பியுள்ளாரே?

அல்லாவையும்,ஏசுவையும் வழிபடுபவர்கள் தமிழர்கள் அல்ல என சொல்லும் தைரியம் அற்ற நபும்சகனின் வார்த்தைக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment