Wednesday, September 16, 2009

FAMILY SAVING IS SAFING INDIAN ECONOMY:WITH EVIDENCES

இந்தியப்பொருளாதாரம் வலிமையாக இருப்பதன் ரகசியம் என்ன?

வேறென்ன . . . நமது அம்மாக்கள் மற்றும் இந்திய இல்லத்தரசிகளின் சேமிப்புதான் நமது நாட்டை வல்லரசு நிலைக்கு உயர்த்தியுள்ளது.சரி! அமெரிக்கா எப்படி பொருளாதாரத்தில் வீழ்ந்தது.அதைத் தானே இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.
1980 களில் அமெரிக்காவில் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 18% முதல் 20% வரை இருந்தது.ஆனால், அமெரிக்க தொழில்துறையின் வற்புறுத்தலால் இது படிப்படியாகக்குறைக்கப்பட்டு 1991 இல் 9% ஆக சுருக்கப்பட்டுவிட்டது.அந்த சுருக்குக்கயிறுதான் அமெரிக்காவின் பொருளாதாரக் கழுத்தையே நெரிக்கத்துவங்கியுள்ளது 2009 இல்!!!

வட்டி விகிதம் குறைந்ததால் அமெரிக்க மக்கள் தனது வைப்புநிதியை எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர்.1980 களில் பங்குச்சந்தையில் 5-6% அமெரிக்கர்களே ஈடுபட்டனர்.இந்த எண்ணிக்கை 2000 வாக்கில் 25% ஆக உயர்ந்தது.இவ்வாறு, அமெரிக்க அரசாங்கமும், அமெரிக்கத் தொழில்துறையும் அமெரிக்க மக்களை அதிக ஆபத்து மிக்க துறையில் முதலீடு செய்யத்தூண்டினர்.அது மட்டுமல்லாமல் அமெரிக்க அரசு சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதிக அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.சமூகச்சீரழிவு அமெரிக்கக்குடும்பங்களில் ஏற்பட்டதால் இன்று 2009 இல் 51% குடும்பங்கள் ஒரு பெற்றோர் குடும்பமாக இருக்கின்றன.பள்ளி செல்லும் மாணவிகளில் மூன்றில் ஒரு பங்கினர் கர்ப்பம் தரிக்கின்றனர்.இவர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி அளித்ததன் மூலம் குடும்பங்கள் தேசியமயமாக்கப்பட்டு அரசுத்துறையின் சேவைகள் தனியார்மயமாக்கப்பட்டன.ஏனெனில் அரசு சேவைகளை புரிய அரசிடம் போதிய நிதி இல்லை.

மேலும் குடும்பங்களின் நிதிச்சுமையினைத் தீர்க்க கடன் அட்டை(க்ரடிட் கார்டு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இன்று அமெரிக்காவில் 120 கோடி கடன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.அதாவது வருமானம் ஈட்டும் ஒரு நபருக்கு 10 முதல் 12 கடன் அட்டைகள் உள்ளன.இவர்களுக்கு அரசும், வங்கிகளும் வெளிநாட்டில் கடன் வாங்க முற்பட்டன.இன்று அமெரிக்க நாட்டினரின் கடன் தொகை அவர்களது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.இவ்வாறு சீரழிந்த குடும்பங்கள் சமூகத்தினை சீரழித்ததால் சமூகப்பாதுகாப்புக்கு செலவு செய்த அரசும் கடனாளியாகி அவர்களுக்கு கடன் வழங்கிய ஒட்டு மொத்த உலகமும் சிக்கலில் மாட்டிக்கொண்டன.
“பாதுகாப்பற்ற சமூகமே சேமிக்க முற்படும்.மிகவும் முதிர்ச்சியடைந்த பொருளாதார நாடான அமெரிகாவின் குடிமக்கள் சேமிக்கத் தேவையில்லை” என்பது ஒரு அமெரிக்க பொருளாதார நிபுணரின் கருத்து.அதற்கேற்றார்போல், அங்குள்ள பெண்களிடம் ஆண்மைத் தன்மை புகுந்துகொண்டது.அமெரிக்கப்பெண்கள் குடும்பப்பாதுகாப்புப்பற்றி அக்கறை கொள்ளாமல் கணவன் செய்யும் வீண் செலவுகளுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.
குடும்பங்களில் அரசு புகுந்தால் குடும்பப் பாரத்தினை தாங்கிக்கொள்வது போல் நடந்துகொண்டால் அது ஆமை புகுந்த வீடு கதையாகிவிடும்.
ஆனால், ஆசிய நாடுகளில் சமுதாயம் என்பது குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு செயல்படுபவை.இந்தியாவின் பொருளாதாரம் சக்திவடிவானது.(ஏன் பல வீடுகளில் இந்துக்கணவன்மார்கள் மனைவியின் பேச்சுக்கு மறு பேச்சுப்பேசுவதில்லை என புரிகிறதா?)இந்து இல்லத்தரசிகளின் சேமிக்கும் பழக்கத்தை உந்துசக்தியாகக் கொண்டது. நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 32 முதல் 35% கடந்த ஆண்டுகளில் குடும்பம் சார்ந்த சேமிப்பாக இருந்து வருகிறது.ஆகவேதான் செலவினால் உந்தப்பட்ட மேலைநாட்டுப்பொருளாதார நெருக்கடி, நமது நாட்டின் பொருளாதாரத்தை அவ்வளவாக பாதிக்கவில்லை.

இந்துப்பெண்களின் இயல்பான குணம் சேமித்தல், அதற்குக் காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்ணே ஆணிவேராகவும், அக்கறை மிக்கவளாகவும் திகழ்கிறாள்.ஆகவே, குடும்பநலன் கருதி சேமிப்பை தனது வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால், அமெரிக்க உலக பொருளாதார நெருக்கடியின் தாக்குதலில் இருந்து இந்துயாவைப் பாதுகாத்தவர்கள் இந்து இல்லத்தரசிகளே!இந்தியாவின் மொத்த சேமிப்பு 260 மில்லியன் டாலர்கள் ஆகும்.

No comments:

Post a Comment