Saturday, September 19, 2009

.சைவ உணவு உண்பதன் மகத்துவம்



சைவ உணவில் குறைவான கொழுப்புச்சத்து இருப்பதால் மாரடைப்பு உள்ளவர்கள் எக்கவலையுமின்றி இந்த உணவை உண்ணலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாது.அதிக மாமிசம் உண்பவர்களுக்குக் குடல் வால்நோய் ஏற்படும் என்றும் அசைவ உணவில் நைட்ரஜன் உள்ளதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படுகிறது என்றும் நைட்ரஜன் அதிகமானால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து மூட்டுக்களில் படிந்துவிடும் என்றும் அதனால் இவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது என்றும் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.தவிர இதனால் குடலில் சில வகையான குடல்புழுக்கள் உண்டாகின்றன.மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் சைவ உணவில் முழுமையாகக் கிடைக்கிறது.மனதைச் செம்மைப்படுத்த சைவ உணவு தேவை.மேலும் அசைவம் தொடர்ந்து சாப்பிடும்போது சாப்பிடுபவர் மிருக உணர்ச்சியடைகிறார்.அவர்களது உடலில் துர்நாற்றம் உண்டாகிறது.

No comments:

Post a Comment