Saturday, September 26, 2009

அடுத்த ஜோதிட நிகழ்வு ராகு-கேது பெயர்ச்சி 2009


இதுவரை மகர ராசியில் ராகு பகவானும்,கடக ராசியில் கேது பகவானும் இருந்தனர்.அவர்கள் கடந்த ஒன்றைரை வருடமாக இந்த ராசிகளை மெல்ல மெல்ல நகர்ந்து,27.10.2009 அன்று ராசிமண்டலத்தில் மாற்றமடைய இருக்கின்றனர்.

ராகு பகவான் 27.10.2009 முதல் தனுசு ராசிக்குள்ளும், அதே நாள் அதே நேரத்தில் கேது பகவான் மிதுன ராசிக்குள்ளும் நுழைகின்றனர்.

ராசி மண்டலத்தில் மிக முக்கிய கேந்திரமான ராசிகளை அடுத்த ஒன்றைரை வருடங்கள் கடக்க இருக்கின்றனர்.தனுசு ராசியில் கேது பகவானின் நட்சத்திரமான மூலமும்,மிதுன ராசியில் ராகு பகவானின் நட்சத்திரமான திருவாதிரையும் அமைந்திருக்கின்றன.

அதே சமயம்,26.9.2009 அன்று இன்னொரு கேந்திரமான முக்கியராசிக்கு தர்ம தேவதையான சனி பகவான் வந்துவிட்டார்.அவர் அங்கு 15.11.2011 வரை இருக்கப்போகிறார்.அதுபோக,டிசம்பர் 2009 ஆம் மாதத்தில் நீசத்தில் இருந்த குருபகவான் மகரத்தை விட்டு கும்பராசிக்குச் செல்லப்போகிறார்.கும்பத்தில் வெறும் மூன்றரை மாதம் மட்டும் இருந்துவிட்டு,அதிசாரம் பெற்று தனது இன்னொரு ஆட்சி வீடான மீனத்துக்குச் செல்லப்போகிறார்.இதனால்,கி.பி.2011 ஆம் ஆண்டில் மட்டும் குருபகவான் ராசிமண்டலத்தில் இறுதியான கேந்திரமான மீனத்துக்கு வரப்போகிறார்.
இந்த கேந்திரங்களில் பெரிய மற்றும் முக்கிய கிரகங்கள் அமர்வு உலகை ஆளும் மனிதர்கள் பிறப்பதற்குக் காரணமாக அமையப்போகின்றன.

அதே சமயம், ராகு கோதண்ட ராகுவாகப்போகிறார்.தனுசு ராசியைத் தான் கோதண்டம் என ஜோதிடத்தை உரைக்கும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன.இதனால்,ஏராளமான புதிய செல்வந்தர்கள் இந்த பூமியில் உருவாகப்போகிறார்கள்.அதே சமயம்,புத்திக்காரனாகிய புதனின் வீட்டில் ஞான அதிபதி கேதுவின் அமர்வு பல புதிய ஆன்மீக வழிமுறைகளையும்,புதிய மதங்களும் இந்த பூமியில் தோன்றக்காரணமாகின்றன.

தனி மனித ரீதியில், தனுசு ராசி மற்றும் மிதுன ராசியினர் தேவையற்ற அவமானத்தையோ அல்லது அனாவசியமான குழப்பத்தையோ உருவாக்கக் காரணமாகப்போகிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் இறைவழிபாட்டை தினமும் செய்வதால் ஓரளவு தாமும்நிம்மதியை அடையவாய்ப்பிருக்கிறது.

வாழ்க வளமுடன்!வாழ்க வையகம்!!!

No comments:

Post a Comment