Monday, February 15, 2016

ஒழுங்கீனத்தைச் சீரமைக்கும் ஈசன் மயிலாப்பூர் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லீஸ்வரர்!


கலியுகத்தில் மனிதனை இயக்குவது மனமே! நல்ல புத்தி இருந்தால்தான் மனம் நல்வழிக்கு வரும்;மனம் நல்வழிபட்டால் உடல் நற்காரியங்களை மட்டுமே செய்யும்;ஈனவே,நாம் வாழ்ந்து வரும் இக்கலியுகத்தில் நற்காரியங்களை ஆற்றுவது பூர்வவினைகளையும்,மனதையும்,உள்ளத்தையும் பொறுத்தது;லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் அல்லது எட்டாமிடத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள்,எப்போதும் பிறருக்கு கெடுதி செய்வதையே தனது சுபாவமாகக் கொண்டவர்கள்;ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள்;இவர்களது அகங்காரம் வானளாவி நிற்கும் தன்மையுடையது;இருப்பினும்,இதில் இருந்து மீள சிவபக்தி,பைரவ பக்தி,வராகி பக்தி இம்மூன்றில் ஏதாவது ஒரு பக்தி இருந்தால் கடைத்தேற முடியும்;

கண்ணால் கண்டதை எல்லாம் கண்டு,மனத்தால் ஆடுகின்ற சராசரி கலியுக மனிதன் தவறான செய்கைகளுக்கு ஆட்பட்டுவிடுகின்றனா;இதனால் தான் புகை,மது,முறையற்ற காம இச்சைகள் போன்ற தீய மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்;

மனிதன் தீய எண்ணங்கள்,தீய சக்திகள்,தீய ஒழுக்கங்களுக்கு ஆளாகாமல் எப்போதும் ஆன்ம நறுமணத்துடன் துலங்குவதற்கு மனதில் உள்ள இறை நாம பூக்களானது வாடாமல்லியாகப் பூத்துக் குலுங்க வேண்டும்;

நறுமணம் என்பது எப்போதும் இறைமனத்துடன் ஒன்றுதலாகும்;இதனால் தான் இறைவழிபாட்டில் மந்திர ஒலி மணத்தோடு நறுமணப் பூக்களும்,ஊதுபத்தி மற்றும் தூபங்கள்,சாம்பிராணி,குங்கிலியம்,அத்தர்,ஜவ்வாது,புனுகு,
கோரோசனை,கஸ்தூரி போன்றவையும் பங்குபெறும்;

எத்தகைய உடல்,மன,உள்ளத்திறனை,ஆரோக்கியத்தைப் பெற்றாலும் நறுமணத்தோடு,நல்ல மனத்தோடு எப்போதும் இறை நினைவோடு வாழ்வதற்கு உதவுவதே ஸ்ரீமல்லீஸ்வர ஆலய வழிபாடாகும்;

கணவன்,மனைவி,குழந்தைகள் நல் ஒழுக்கத்துடன் வாழ விரும்புவோர்(கணவனுக்காக மனைவியும்,மனைவிக்காக கணவனும்,சகோதரனுக்காக சகோதரியும்,சகோதரிக்காக சகோதரனும்,மகன்/ளுக்காக பெற்றோர்களும்) பின்வரும் வழிபாடு செய்து வரவேண்டும்;

தொடர்ந்து முடியாவிட்டாலும்,6 திங்கட்கிழமைகளில் இங்கே அபிஷேகம்,ஆராதனைகள் செய்து மணம் நிறைந்த உணவுகளை படையல் இட வேண்டும்;உரியவர்களின் பெயரை அர்ச்சனை செய்துவிட்டு,படையலை தாமரை இலையில் வைத்து இங்கே வரும் சிவபக்தர்களுக்குத் தானம் தரவேண்டும்;
இப்படிச் செய்வதன் மூலமாக வழிமாறிச் சென்றவர்கள் நிச்சயமாகத் திருந்தி வாழத் துவங்குவர்;

திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்த நாளில்(6.6.16 திங்கள் மதியம் 12.45 முதல் திருவாதிரை நட்சத்திரம் அன்று முழுவதும் இருக்கிறது;4.7.16 திங்களும் அமாவாசையும்,திருவாதிரையும் இணைந்து வருகிறது;3.4.17 அன்றும் வருகிறது) செய்வது சிறப்பு;

திங்கட்கிழமையும் அமாவாசையும் (4.7.16)சேர்ந்து வரும் நாளில் செய்யலாம்;

திங்கட்கிழமையும் சிவராத்திரியும் இணைந்திருக்கும் நாளில்(7.3.16 மகாசிவராத்திரி; 18.7.16; 1.8.16;28.11.16 மதியம் 2.52 வரை சிவராத்திரி;12.12.16 காலை 10.44 முதல் ஆரம்பமாகி மறுநாள் வரை இருக்கிறது;10.4.17 காலை 10.48 வரை இருக்கிறது) செய்வது இன்னும் மிகுந்த புண்ணியத்தையும்,சிவ அருளையும் அள்ளித் தரும்;

ஓம் அகத்தீசாய நமஹ


No comments:

Post a Comment