Monday, February 15, 2016

தற்கொலை மற்றும் விரக்தி எண்ணங்களை நீக்கும் கணபதி வழிபாடு!!!


கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இன்றைய காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறோம்; கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நல்ல செயல்களால் இன்று வருமானம்,சுகம்,வீடு,வாகனம்,வசதிகள்,பெற்றோர்கள்,குடும்பம் அமைகின்றது;

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த திமிர்த்தனங்களால் இன்று அவமானப்படுகிறோம்;கடன் படுகிறோம்;நாம் தந்த கடன் நமக்குத் திரும்பவருவதில்லை;ஒழுக்கமாக வாழ்ந்து ஒழுக்கங்கெட்டவன்/ள் என்று அவப்பெயர் பரவுகிறது;
இவைகளால் நாம் செத்துவிடலாமா? என்று கூட கவலைப்படுவதுண்டு;அல்லது அடிக்கடி நாமெல்லாம் இந்த பூமியில் யாருக்குமே தேவையில்லையோ? என்ற விரக்தி வருவதுண்டு;

இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்கள் பின்வரும் அகத்திய உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும்;

16 தேய்பிறை சதுர்த்தி நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் தெருவில் இருக்கும் விநாயகருக்கு வறுத்த முந்திரிப்பருப்பை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;யார் விரக்தியாக இருக்கிறார்களோ,அவர்களின் மூன்று கைப்பிடி அளவுக்கு வறுத்த முந்திரிப் பருப்பை நைவேத்தியமாகப் படைத்துவிட்டு,பின்வரும் கணபதி மந்திரத்தை 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

ஓம் மஹா கணபதி நமஹ

நேரில் எம்மை சந்திப்பவர்களுக்கு இதைவிடவும் தெய்வீகத் தன்மை நிறைந்த,சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை உபதேசம் செய்ய இயலும்;

பிரபலமான விநாயகர் ஆலயமாக இருந்தால் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம்;அருகம்புல் மாலை வாங்கி அணிவிக்கலாம்;நிறைவாக நைவேத்தியத்தை அங்கே வருபவர்களுக்குப் பிரசாதமாக பகிர்ந்து தரவேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக விரக்தி மனப்பான்மை படிப்படியாக அகலும்;


நிறைவாக(முடிந்தால் மட்டும்) விநாயகர் பிறந்த இடமான வழுவூர் வீரட்டேஸ்வர் ஆலயத்திற்கு 16 வது தேய்பிறை சதுர்த்தி திதி வரும் நாளில் இதே மாதிரி நைவேத்தியம் வைத்து வழிபடலாம்;16 வது தேய்பிறை சதுர்த்தி திதிக்குத்தான் இங்கே செல்ல வேண்டும் என்றில்லை;11 வது தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 16 வது தேய்பிறை சதுர்த்திக்குள் ஏதாவது ஒரு சதுர்த்திக்குச் செல்லலாம்;

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 வது கி.மீ.தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது;அங்கிருந்து 2 கி.மீ.சென்றால் வழுவூர் வீரட்டானம்(அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம்) வரும்;சபரிமலை ஐயப்பன் பிறந்ததும் இங்கேதான்;ஓம் வராகி சிவசக்தி ஓம் மந்திரம் உதயமானதும் இங்கே தான்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

No comments:

Post a Comment