Monday, October 12, 2015

யாருக்கு எல்லாம் பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் இருக்கின்றன?

யாரெல்லாம் இப்பிறவியில் முறைப்படி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரவில்லையோ,அவர்களுக்கெல்லாம் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை இருக்கிறது;

ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரவேண்டும்?

ஏன் என்றால் தாத்தா சொத்து பேரனுக்கு என்ற பாரம்பரிய சொல் வழக்கு எந்த அளவுக்கு உண்மையோ,அதே போல,தாத்தா பாவமும் பேரனுக்கு(பேத்திக்கும் சேர்த்தேதான்)
பூமியில் ஒரு ஆண்டு காலமாக இருப்பது,முன்னோர்களாகிய நம்முடைய பித்ருக்களுக்கு ஒரு நாள் ஆகும்;

நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை எனது பேரனும் பேத்தியும் அனுபவிக்கின்றனர்;ஆனால்,எனக்கு முறைப்படி பித்ரு தர்ப்பணம் செய்வதில்லையே? என்று முன்னோர்கள் ஏங்கினால் போதும்;இங்கே நமது உடன் பிறப்புகளிடையே ஆரம்பிக்கும் சாதாரண மனக் கசப்பு சொத்துக்கான வழக்காக விஸ்வரூபம் எடுத்துவிடும்;

முன்னோர்களுக்கு எப்படி தர்ப்பணம் கொடுப்பது?எப்போதெல்லாம் கொடுப்பது?
அம்மாவின் அம்மா,அப்பா; அப்பாவின் அம்மா,அப்பா என்று நான்கு பேர்களும் வெவ்வெறு நாட்களில் சிவப்பதவி அடைந்திருப்பர்;ஒரு ஆண்டில் நான்கு நாட்களும்(திதி) முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்குமளவுக்கு நம்மில் எத்தனை பேர்களுக்கு பொருளாதார வசதி இருக்கிறது?


எனவேதான் ஒரு ஏற்பாட்டை நமது முன்னோர்கள் செய்துவைத்தனர்.ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை என்று ஆண்டுக்கு முன்றே மூன்று நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது என்றனர்;அதுவும் முடியாத பட்சத்தில் புரட்டாசி அமாவாசை அன்றாவது தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என்பதை சித்தர்களின் ஆசியால் கண்டறிந்தனர்;புரட்டாசி அமாவாசை அன்று மட்டும் செய்யப்படும் முன்னோர்கள் தர்ப்பணம் கடந்த 12 ஆண்டுகளுக்கு தர்ப்பணம் செய்த புண்ணியத்தைத் தரும்;
வசதி உள்ளவர்கள் கடலோரம் அல்லது நதிக்கரையோரம் தர்ப்பணம் செய்யலாம்;

வசதி இல்லாதவர்கள் உள்ளூர் சிவாலயத்தில் தர்ப்பணம் செய்யலாம்;

அதுவும் இயலாதவர்கள் தமது வீட்டிலேயே தர்ப்பணம் செய்யலாம்;

மகாளய பட்சம் முழுவதும் இந்துக்களாகிய நாம் எந்தவிதமான ரொமான்ஸ் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது;இந்த நாட்களில் நமது பித்ருக்கள் நமதுவீட்டின் நீர்நிலைகளில் அமர்ந்திருப்பர்;நம்மை கவனித்துக் கொண்டே இருப்பர்;

எப்படிச் செய்வது? என்பதை அறிய விரும்புவோர்  உங்கள் முகவரி(e-mail),செல் எண்,தற்போது வசிக்கும் ஊரை குறிப்பிட்டு அனுப்பவும்;ஆங்கிலத்தில் பிடிஎஃப் வடிவில் சித்தர்களின் தலைவர் அகத்திய மகாமுனி அவர்கள் நமக்கு போதித்த பித்ரு தர்ப்பண வழிமுறை  உங்களுக்கு மின் அஞ்சல் வரும்;


ஆறு தர்ப்பைப் புல்,தர்ப்பை பாய்( சென்னையில் சில காதிபவன் களில் கிடைக்கும்;அகத்தியர் ஆசிரமத்தில் கிடைக்கும்) வாங்கிக்கொள்ளவும்;


12.10.2015 புரட்டாசி அமாவாசை வருகிறது;இந்த முறைப்படி, பித்ரு தர்ப்பணம் செய்தால் அளவற்ற பலன் உடனடியாக கிட்டும்;


ஏதாவது கால சூழ்நிலையில் நாளைக்குச் செய்ய இயலாதவர்கள்,அடுத்து வரும் அமாவாசைகளில் செய்யலாம்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

No comments:

Post a Comment