Monday, May 14, 2012

நல்லது விதைத்தார்;நேர்மை விளைந்தது!!!


ஈரோடு எஸ் ஜி மெட் மருத்துவமனைக்கு,சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குருமூர்த்தி என்பவரைக் கொண்டுவந்தார்கள்.மற்ற பெரு வர்த்தக மருத்துவமனைகளில் ரூ.50,000/-முன் தொகை கட்டினால் தான் அட்மிஷனே நடக்கும்.ஆனால்,எஸ் ஜி மெட் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மாரிமுத்துசரவணன்,குருமூர்த்திக்கு சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றினார்.டாக்டர்களுக்குத் தரவேண்டிய கட்டணம் நீங்கலாக மருத்துவமனைக்கு ரூ.88,000/-செலவாயிற்று.குருமூர்த்தி குடும்பத்தினரிடம் இருந்ததோ ரூ.5,000/-மட்டுமே!

சில மாதங்களுக்குப் பிறகு குருமூர்த்தி அந்த மருத்துவமனைக்கு தானாகவே வந்து ரூ.30,000/-கொடுத்தார். “என்னால் முடிந்தது இவ்வளவுதான்” என்று கூறி கண்கலங்கினார்.

எம்.பி.பி.எஸ்.முடித்தும் ஒரு பெரு வர்த்தக மருத்துவமனையில் பணிபுரிந்த மாரிமுத்துசரவணன்,அங்கு மனித உயிரைவிட பணமே பிரதானமாக இருந்ததைப் பார்த்து,மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அங்கு வேலை செய்ய மனமில்லாமல் அந்தப்பணியை உதறினார்.
ஸ்ரீகணபதி மருத்துவம்,கல்வி அறக்கட்டளை தொடங்கினார்.86 டாக்டர்கள் உள்பட 486 நண்பர்கள் இந்த அறக்கட்டளையில் இணைந்திருக்கிறார்கள்.

நன்றி:ஆனந்த விகடன் 25.4.12;விஜயபாரதம்,பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம் 13,18.5.12

2 comments:

  1. all the best மாரிமுத்துசரவணன் sir,

    ReplyDelete