Tuesday, March 6, 2012

கோரக்கர் சித்தரின் வாழ்க்கையும்,கலியுகம் பற்றி அவரது எளிமையான பாடல்களும் நன்றி:கோரக்கர் அருளிய சந்திர ரேகை


உலகின் நல்லன பெருக்க இறைவன் மனித வடிவெடுப்பான் என்பது கீதையின் பொன்மொழி.இவ்வாறு உலகில் பல சித்தர்கள் தோன்றினர்.இவர்கள் மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்குப் பெருந்தொண்டுகள் செய்தனர்.இத்தகு சித்தர்கள் வரிசையில் தோன்றியவர் கோரக்கர்.இவர் தம் நூல்களில் மனித சமுதாயம் மேம்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
கோரக்கர் சித்தர் மற்ற சித்தர்கள் மறைபொருளாய் எழுதியவற்றையெல்லாம் இகம் பரம் இரண்டின் ரகசியங்களையும் எளிதாய் அறிந்து பேரின்ப நிலையை அடைந்து அழிவின்றி வாழும் வகையில் அனைத்தையும் 16 நூல்களில் 8450 பாடல்களாய்ப் பதிவு செய்தார்.இதையறிந்த பிற சித்தர்கள் மறைபொருளாய் பாடியவற்றை எல்லாம் வெளிப்படையாகப் பாடி வைத்ததனால் ஏற்படும் விளைவுகள் பற்றிக் கூறி கோரக்கரை கடிந்தனர்.
ஆனால்,கோரக்கரோ சித்தர்களாகிய நாம் தவ வலிமையால் பெற்ற விஷயங்களை ரகசியமாய் வைத்துக்கொள்வதால் என்ன பயன்? இவை நம்மோடு மறைவதால் யாருக்கு என்ன லாபம் என்றார்.
இவரது வாதத்தை சித்தர்கூட்டம் ஏற்றுக்கொள்ளவில்லை;கோரக்கரிடமிருந்து அதனைப் பறிப்பதிலேயே குறியாய் இருந்தனர்.இருப்பினும் கோரக்கரின் மனம் ஒப்பவில்லை;தன் சக சித்தர்களையும் எதிர்க்கவும் முடியவில்லை;அவர்களை தம் இருப்பிடத்திற்கு அழைத்து வந்து சுவடிகளைத் தருவதாகக் கூறி,அதற்கு முன் தான் தரும் அடையைச் சாப்பிடும்படி வேண்டினார்.அடையில் கலந்த கஞ்சாவினால் சித்தர்கள் மயக்கமுற்றனர்.

                                 அந்த இடைவெளியில் தம் 16 நூல்களில் உள்ள 8450 பாடல்களின் முக்கியமான சாரத்தையெல்லாம் தொகுத்து 200 பாடல்களில் அடக்கி அந்த நூலுக்கு ‘சந்திர ரேகை’ எனப் பெயர் சூட்டினார்.மேலும் அதனைப் பாதுகாப்பாக மறைத்த உடன் அதனைக் காக்குமாறு சிவனையும்பார்வதிதேவியையும் வேண்டினார்.இவ்வாறாக கோரக்கர் பெருமானால் 16 நூல்களில் 8450 பாடல்களாக இருந்த தத்துவங்களின் சாறாக உருவானதே இந்த சந்திர ரேகை நூல் ஆகும்.


இந்த நூலின் விலை ரூ.110/-புத்தகம் கிடைக்கும் இடம்: குறிஞ்சி,15/21,டீச்சர்ஸ் கில்டு காலனி,2 வது தெரு,வில்லிவாக்கம்,சென்னை 49.தொலைபேசி:26502086.  


இந்த நூலில் சந்திரரேகை 200.நமனாசத் திறவுகோல் 100,இரவிமேகலை 75,முத்தாரம் 91,நாதபேதம் 25இல் 20,தனித்தொகுப்பு 9,போகநாதர் கற்ப சூத்திரம் 18 அடங்கியிருக்கிறது) ஓரளவு தமிழின் மீது ஆர்வமுள்ளவர்கள் வாங்கி,கோரக்கரின் சித்தர் உலக அனுபவங்கள்,உபதேசங்களை வாசிக்கலாம்.இந்த புத்தகம் முழுவதுமே பாடல்களாக இருக்கின்றன.இந்த புத்தகத்தில் கலியுகம் பற்றி 82 ஆம் பாடல் முதல் 87 ஆம் பாடல் வரையிலும் எளிமையாக எழுதியிருக்கிறார்.நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்காக அந்தப் பாடல்களை பதிவேற்றிட பலமுறை முயன்றும்,முயற்சி தோல்வியடைந்துவிட்டது.(எந்தவிதமான கணினித் தவறும்,நச்சுநிரலும் இதற்குக் காரணம் இல்லை;)எனவே,இந்த புத்தகத்தை வாங்கி வாசிக்கவும்.எல்லாம் கோரக்கரின் அருள்!!!


ஓம்சிவசிவஓம்
                           
                     

1 comment:

  1. kaliyugam- inthiyaavin varalaaru eppadi irukkum enru korakkar chandira rekai nool kurithum athil ulla paadalkalaiyum THOZHI THOZHI blogger virvaaga inru kooriyullaar. paadalai padikka virppam ullavarkal "THIZHI THOZHI" blogger parkkavum

    ReplyDelete