Friday, March 30, 2012

மனக்கட்டுப்பாடு தரும் பைரவ ஜபம் & பைரவ உபாசனையின் ஆரம்ப கட்டம்


மனதை தன் வசப்படுத்திட ஒரு வாரம் வரை இந்த பயிற்சியினை செய்ய வேண்டும்.இந்த ஒரு வாரத்துக்கு தாம்பத்தியம் வைத்துக்கொள்ளக் கூடாது;(அவ்வாறு இருக்க இயலாதவர்கள் இதை கண்டிப்பாக செய்யக் கூடாது.மீறினால்,எதிர்விளைவுகளாக தேவையற்ற பிரச்னைகள் உண்டாகும்;அந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாது:எச்சரிக்கை!!!)
ஒரு பக்கத்திற்கு இரண்டு இன்ச் வீதமாக 45 டிகிரி உள்ள ஒரு முக்கோணம் வரைய வேண்டும்.இது மெல்லிய கோடாக இருந்தால் போதும்.இதன் நடுவில் ஒரு கறுப்பு புள்ளியை இட வேண்டும்.வெள்ளையான சுவரில் நமது நெற்றிக்கு நேரான உயரத்தில் வருவதுபோல இந்த முக்கோணத்தை ஒட்ட வேண்டும்.அந்த சுவற்றில் வேறு நிறமோ,படங்களோ இருக்கக் கூடாது.
நிமிர்ந்து உட்கார்ந்து கண்கலின் இமையை அசைக்காமல் அந்த புள்ளியையே மூன்று நிமிடம் பார்க்க வேண்டும்.உடனடியாக கண்களை மூடி,நெற்றியின் நடுவில் நினைவை வைத்துப் பார்த்தால் இளஞ்சிவப்பு வெள்ளைநிறம் கலந்த புள்ளி தோன்றும்.அதையே பார்த்தவாறு, “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று உதடு அசையாமல் (மனதுக்குள்) ஜபம் செய்ய வேண்டும்.புள்ளி தொடர்ந்து தெரியாமல் இருந்தாலும்,ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் 7 நாட்களுக்கு இந்த ஜபத்தைச் செய்ய வேண்டும்.
ஆரம்ப நாட்களில் கண் இமையாது பார்ப்பதால்,கண்களில் நீர் வடியலாம்;கண் எரிச்சல் உண்டாகலாம்;ஆகவே,குளிர்ந்த நீரால் முகத்தை(கண்களை) தினசரி நன்கு கழுவவும்.
உறங்கும்போது இடது கைபக்கம் கீழே இருப்பது போல் தூங்க வேண்டும்.
மிதமான உணவு சாப்பிடவேண்டும்.தண்ணீர் நிறைய அருந்த வேண்டும்.அருகில் இருக்கும் பைரவர் சன்னதிக்கு தினசரி மாலை 5 முதல் 7 மணிக்குள் சென்று வழிபட வேண்டும்.இந்த நேரத்தில் முடியாவிட்டால்,உங்களுக்கு வசதியான நேரத்தில் வழிபடவும்.
இந்த 7 நாட்களும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம் (மேற்கூறியவாறு)செய்ய வேண்டும்.
சும்மா இருக்கும் நேரங்களில் “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று ஜபித்துக்கொண்டே இருக்க வேண்டும்.(இவ்வாறு ஜபித்துக்கொண்டே இருக்கும்போது,மஞ்சள் விரிப்பில் அல்லது நாற்காலியில் அமர்ந்திருக்க வேண்டும்)
எச்சில் துப்பினால் கூட இடதுபுறமாகத் தான் துப்ப வேண்டும்.
தூங்கும்போது இடதுகை பக்கம் கீழே இருப்பது போல தூங்க வேண்டும்.
திருமணமாகியிருந்தாலும் கண்டிப்பாக பிரம்மச்சாரியம்(தாம்பத்தியத்துக்கு விடுமுறை!) கடைபிடிப்பது அவசியம்.
சுத்தமில்லாத இடங்களில் சாப்பிடக்கூடாது;சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.புகை,மது பழக்கம் கண்டிப்பாக கூடாது.
இவ்வாறு செய்தால் ஓரிரு நாட்களிலேயே கனவில் நாய்களைப்பார்க்கலாம்;அல்லது பைரவரை கனவில் காணமுடியும்.
இது பைரவ உபாசனையில் ஆரம்பப் பயிற்சி ஆகும்.

இந்த வழிபாட்டுமுறையை நமக்கு சித்தர்களின் அருளால் நமக்கு அருளியிருப்பவர் கொல்லிமலை சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்கசுவாமிகள்.

ஆதாரம்:பைரவ ரகசியம் பகுதி 1,பக்கம்47,48.

No comments:

Post a Comment