Tuesday, June 14, 2011

DRDO Chief சிவதாணுப்பிள்ளையின் பேட்டி



DRDO Chief சிவதாணுப்பிள்ளையின் பேட்டி







கேள்வி:இந்தியாவுக்காக நிறைய ஏவுகணைகள் உருவாக்கியிருக்கீங்க.உங்களுக்குப் பிடிச்ச ஏவுகணை எது?






இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான பிரமோஸ்.இது ஒலியைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பாயும்.அதை ஏழு மடங்கு அதிக வேகத்தில் பாயச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கோம்.






இப்போதைய பிரமோஸ் ஏவுகணையை எதிர்க்கும் ஏவுகணையை எந்த நாடும் இதுவரை கண்டுபிடிக்கலை;ஏழு மடங்கு வேகத்தில் பாயும் பிரமோஸை உருவாக்கிட்டா, அதைத் தடுத்து நிறுத்த அவங்களுக்கு இன்னும் 30 வருஷங்கள் தேவைப்படும்!






கேள்வி:சீனாவோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவபலம் வலுவாக இருக்கிறதா?






தரைப்படையில் நம்மைவிட சீனர்கள் கூடுதல் சோல்ஜர்களை வைத்திருக்கிறார்கள்.ஆனால்,அந்த இடைவெளியை நாங்கள் உருவாக்கிய ப்ருத்வி ஏவுகணை மூலம் நிரப்பலாம்.பொதுவாக,ஏவுகணைகள் ஒரே பாதையில் பயணம் செய்து தாக்கும்.எங்கே இருந்து வருகிறது? எதைத் தாக்கவிருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.ஆனால்,ப்ரித்வி பாம்பைப் போல வளைந்து,நெளிந்து பாதையை மாற்றிக் கொண்டே பாயும்.இது செல்லும் திசையை யாராலும் கணிக்க முடியாது.இந்திய ராணுவத்தின் பலமே இதுபோன்ற உயர் தொழில்நுட்பம்தான்!






நன்றி:ஆனந்த விகடன்,20,21;1.6.11









No comments:

Post a Comment