Thursday, June 30, 2011

விஜயாபதியில் நான் உணர்ந்த அதிசயம்

எனக்கு பிதுர் தோஷம் இருக்கிறது.இதனால் எனது திருமணமானப் பின்னரும் பத்தாண்டுகளாக எதிலும் எதிர்பார்க்கும் வருமானம்,சம்பளம் கிடைக்கவில்லை;இந்நிலையில் எனது ஜோதிட குருவிடம் நான் ஏன் இன்னும் பெரிய அளவில் வருமானம் பார்க்கவில்லை?எனக் கேட்டேன்.எனது பிறந்த ஜாதகத்தைக் கொடுத்தவாறு!



பிதுர்தோஷம் இருக்கும்வரையிலும் எந்தக் கோவிலுக்குச் சென்று எத்தனை வழிபாடுகள்,அன்னதானங்கள்,விரதங்கள் செய்தாலும் அதன் பலன் நம்மை வந்துசேராது;ஏனெனில்,பித்ருக்களால் தோஷம் இருக்கும்போது பித்ருக்களுக்கு மறுபிறவியில்லாமல் பல ஆண்டுகளாக கொதிக்கும் வெயிலில் அல்லது குளிர்ந்த அறையில் தவிக்கும்.அதனால் ஏற்படும் துயரத்தின் காரணமாக அவர்கள் விடும் சாபமே பித்ரு தோஷமாக நமது பிறந்தஜாதகத்தில் அமைகிறது.(அப்படிப் பட்ட கிரகநிலை அமையும்போது நாம் பிறக்கிறோம்.)அதுதான் அவரவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,3,5,9 ஆம் இடங்களில் ராகு அல்லது கேது இருந்தாலே அது பிதுர்தோஷம் தான்.ஆக,தமிழ்நாட்டில் வாழும் 3 கோடிகுடும்பங்களில்(தோராயமாகத்தான் இந்த மதிப்பீடு) எதாவது ஒரு குடும்ப உறுப்பினருக்கு பித்ரு தோஷம் இருக்கத்தான் செய்யும்.அது யாருக்கு இருக்கிறது?என்பதை அறிந்து,அவரே நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகிலிருக்கும் கடலோர கிராமமாகிய விஜயாபதியில் நவகலசயாகம் செய்ய வேண்டும்.

இதை அறிந்து எனது ஆன்மீக குருவும்,ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயாஅவர்களின் வாழ்நாள் சீடருமாகிய திரு.சிவ.மாரியப்பன் அவர்களுடன் முதல் முறையாக 11.6.11 அன்று விஜயாபதிக்கு எனது ஜோதிட வாடிக்கையாளருடன் நவகலசயாகம் செய்ய பயணித்தேன்.



விஜயாபதியிலிருந்து வெறும் நான்கே கிலோமீட்டர்கள் தூரத்தில் தெற்குப்பக்கம் கடலோரத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய ரியாக்டர்கள் தெரிந்தது.

உடனே,எனது மனதில் சில அரசியல் எண்ணங்கள் தோன்றின.செர்னோபில் மாதிரி அல்லது ஜப்பான் அணு மின் உலை மாதிரி இந்த கூடங்குளம் அணுமின் நிலையமும் விபத்துக்குள்ளானால்,தமிழ்நாடு,இலங்கை முழுவதுமே மனித சுவடின்றி அழிந்துவிடுமே?



ஒருவேளை இலங்கையை ஆக்கிரமித்திருக்கும் சீனாவானது ஒரே நேரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் மீதும்,கூடங்குளம் அணு மின் நிலையம் மீது தலா ஒரு ஏவுகணையை வீசிவிட்டால்?

தென் இந்தியா,மாலத்தீவு சர்வநாசமாகிவிடுமே! சித்தர்கள் பூமியான தமிழ்நாட்டுக்கே இப்படி ஒரு சோதனையா? என நினைத்தேன்.



எனது குருவிடம் ஏண்ணே! கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் தொடங்கிவிட்டால்,நம்மால் இந்த விஜயாபதிக்கு வர முடியுமா? எனக் கேட்டேன்.வாகன சப்தத்தில் அவருக்கு நான் கேட்ட கேள்வியின் உள்ளார்த்தம் விளங்கவில்லை;



என்ன கேட்டீங்க? என்றார்.



இல்லைண்ணே! கூடங்குளம் அணு ரியாக்டர்கள் செயல்பட ஆரம்பித்துவிட்டால்,வெறும் 3 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் நமது விஜயாபதியும் ராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடுமே! நாம் தொடர்ந்து இனி வரும் காலங்களில் எப்படி இங்குவந்து நவகலசயாகம் செய்து நமது ஜோதிட வாடிக்கையாளர்களைக் காப்பாற்றுவது? எனக் கேட்டேன்.



அப்படியெல்லாம் நடக்காது என்று மட்டும் சொன்னார்.அவரது குரலில் கோபம் தெரிந்தது.



விஜயாபதியில் நவகலசயாகம் முடிந்து திரும்பிய இரண்டே வாரத்தில் மீண்டும் ஒருமுறை விஜயாபதி செல்லும் சந்தர்ப்பம் எனக்கு அமைந்தது.ஒரு கிறிஸ்தவ தம்பதிக்கு பிதுர்தோஷம் நீக்கிட நானும் உடன் சென்றேன்.வாகனத்தில் நெல்லையைக் கடக்கும்போது வழக்கமாக நான் வாசிக்கும் ஜீனியர் விகடன் வாங்கினேன்.அது 29.6.11 தேதியிட்ட வெளியீடு.அதில் அணு ஆட்டம் என்ற ஒரு தொடர் வெளிவருகிறது.அந்தத் தொடரில் ஒரு பெட்டிச்செய்தி வெளிவந்திருக்கிறது.அந்த பெட்டிச் செய்தியின் தலைப்பு:போராட்டக் களத்தில் புல்லும் ஆயுதமோ?



அதில் இருப்பதை அப்படியே தருகிறேன்.வாசியுங்கள்;



மாஸ்கோ நகரில் இருந்து பெட்ரோ சவோஸ்க் எனும் ஊருக்குப் போய்க்கொண்டிருந்த ரஷ்ய விமானம் ஜீன் 21,2011 அன்று விபத்துக்கு உள்ளாகி 44 பேர் மரணம் அடைந்தனர்.இறந்தவர்களுள் முக்கியமானவர்கள்,கூடங்குளம் அணு மின் நிலையத்தின் அணு உலைக்கலனை வடிவமைத்த கில்டோபிரஸ் எனும் நிறுவனத்தின் தலைவர்,துணைத்தலைவர்,உலைவடிவமைப்பாளர் மற்றும் இரண்டு பொறியாளர்கள்.



இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கூடங்குளம் பகுதி மக்கள் தங்கள் மண் விஸ்வாமித்திரர் கோயிலால் பாதுகாக்கப்படுவதாகவும்,உலை சம்பந்தப்பட்ட ராஜீவ் காந்தி,போரிஸ் எல்ட்சின்,எஸ்.கே.அகர்வால் போன்றோர் உயிர் இழந்துவிட்டதாகவும்,மிக்கயில் கோர்பசேவ்,தேவகவுடா போன்றவர்கள்,பதவிகளை இழந்துவிட்டதாகவும்,இந்த மாதிரியான சாபக்கேடுகள் தொடரும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்!!!



வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள்.வலிமையுற்ற ஓர் அமைப்பை,வலிமையற்ற ஒரு தரப்பு எதிர்த்துக் களமாடும்போது கையில் கிடைக்கும் ஆயுதங்களை எல்லாம் பிரயோகிக்க முயலுகின்றனர்.ஹிட்லருக்கு எதிரான பொய்களும்,கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிரான நகைச்சுவைகளும்,கலவரங்களின்போது வதந்திகளும் என நீண்ட பட்டியலே தரலாம்.அந்த வகையில் இந்த நம்பிக்கையும் கூடங்குளம் மக்களுக்கு ஓர் ஆயுதம் தானே?



இந்த வரிகளை வாசித்துமுடித்ததும் எனக்குள் ஓர் சிலிர்ப்பு எழுந்தது.உடனே,நீங்க சொன்னது நிஜமாயிடுச்சு பாருங்க என எனது ஆன்மீக குருவிடம் இந்த ஜீனியர் விகடன் பெட்டிச் செய்தியைக் கொடுத்து வாசிக்கச் செய்தேன்.



ஓம்சிவசிவஓம்

ஓம்விஸ்வாமித்ர மகரிஷியே நமஹ

No comments:

Post a Comment