Tuesday, December 24, 2019

செல்வ வளம் தரும் மார்கழி மாதம்!



விகாரி வருடத்தின் மார்கழி மாதம் 17.12.2019 செவ்வாய்க்கிழமை முதல் 13.1.2020 செவ்வாய்க்கிழமை வரை அமைந்திருக்கின்றது;


இந்த மாதம் முழுவதும் யார் தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது மஹாவிஷ்ணு ஆலயம் சென்று மந்திர ஜபம்.அன்னதானம்,அபிஷேகம்,அடிப்பிரதட்சணம்=இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்கின்றீர்களோ அவர்களுக்கு இறை கடாட்சம் மொத்தமாக கிடைக்கின்றது;


மார்கழி முதல் ஆனி மாதம் வரை தேவ உலகங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு பகல் பொழுது ஆகும்;அதில்,மார்கழி மாதமானது அதிகாலைப்  பொழுதாக அமைந்திருக்கின்றது;அப்படித்தான் கால தேவனாகிய கால பைரவப் பெருமான் அவர்களுடைய காலத்தை வடிவமைத்திருக்கின்றார்;


ஆண்கள் சொர்ண வராகி மந்திரத்தையும்

க்லீம் வராஹ முஹி;ஹ்ரீம் ஸித்திஸ்வ ரூபிணி
ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா

பெண்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தையும் ஜபித்து வர வேண்டும்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ண பைரவ ப்ரசோதயாத்;

ஓம் த்ரிபுராயைச வித்மஹே
பைரவ்யைச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்;


மார்கழி 1 ஆம் நாள் முதல் மார்கழி 30 ஆம் நாள் வரையிலும் தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் ஜபித்து வர வேண்டும்;எண்ணிக்கை கூடாது;கோவிலுக்குள் ஏதாவது ஒரு இடத்தில் ஜபித்து வர வருமானம் பெருகும்;வர வேண்டிய தொகை வர ஆரம்பிக்கும்;இது அவரவரின் ஜனன ஜாதகப்படி அமையும்;


வெளிமாநிலம்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள்,நடமாட முடியாத உடல் அமைப்பில் இருப்பவர்கள் வீட்டில் பூஜை அறையில் ஜபிக்கலாம்;


நதிக்கரையோரம் வாழ்ந்து வருபவர்கள் தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது,சூரிய உதயத்தை பார்த்தவாறு பின்வரும் வராகி மந்திரத்தை ஜபித்து வரலாம்;கழுத்தளவு தண்ணீரில் நதியில் நின்றவாறு குறைந்தது 30 நிமிடம் வரையிலும்,அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரையிலும் ஜபிக்கலாம்;


ஒரு போதும் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் மட்டுமே இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இல்லாவிட்டால்,எதிர்விளைவு தான் உண்டாகும்;ஜாக்கிரதை!


ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் டஹ டஹ ஸ்வாஹா


வீட்டு குளியல் அறையில் ஒரு போதும் இம்மந்திரத்தை ஜபிக்க கூடாது;அதுவும் எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும்;

இவை அனைத்தும் ரகசிய ஜபமுறைகள் ஆகும்;எனவே,மிக ரகசியமாக ஜபித்து செல்வச் செழிப்பை அடைய வாழ்த்துக்கள்!!!


No comments:

Post a Comment