Thursday, November 21, 2019

வடக்கு அண்ணாமலையும்,தெற்கு அண்ணாமலையும்


வடக்கு அண்ணாமலையும்,தெற்கு அண்ணாமலையும்

உலகத்தில் ஒவ்வொரு ஆலயத்திற்கும் இணையாக இன்னொரு ஆலயம் அல்லது வேறு சில ஆலயங்களை சித்தர்களின் தவ ஆற்றலால்,ஈசனின் திருவிளையாடல் மூலமாக மன்னர்கள் உருவாக்கி உள்ளார்கள்

வடக்கு திரு அண்ணாமலையின் புகழையும்,கிரிவலத்தின் மகிமைகளையும் விவரிக்க 100 ஆண்டுகள் போதாது; இங்கே 400 ஆண்டுகளுக்கு முன்பு வல்லாள மகராஜா என்று ஒரு மன்னர் ஆட்சி புரிந்தார்;இவரிடம்   அருணாச்சலேஸ்வரர் ஏராளமான திருவிளையாடல் புரிந்துள்ளார்;இவருக்கு குழந்தை இல்லாததால்,இவருக்கு தானே மகனாகி,ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் செய்து வருகின்றார்;ஒவ்வொரு ஆண்டும் இது ஒரு திருவிழாவாக நடைபெற்றுவருகின்றது;

தெற்கு அண்ணாமலை என்று அழைக்கப்படுவது அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில் ஆகும்;இது கரிவலம்வந்த நல்லூர் என்ற கிராமத்தில்  அமைந்திருக்கின்றது;விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகரில்  இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சங்கரன் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கின்றது;

இங்கே இருந்து அருளாட்சி புரிந்து வரும் பால்வண்ணநாதர்,இங்கே ஆட்சி புரிந்த வரகுணப் பாண்டியன் என்ற மன்னனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிரார்த்தம் கொடுத்து வருகின்றார்;இம்மன்னனுக்கு குழந்தைகள் இல்லை; இம் மன்னனின் வேண்டுதல் படி ஒவ்வொரு ஆண்டும் ஈசனே வருடாந்திர சிரார்த்தம் செய்து வருகிறார்;

No comments:

Post a Comment