Thursday, November 21, 2019

அட்டவீரட்டானங்களுக்கு இணையான பைரவர்கள்!!!


அட்டவீரட்டானங்களுக்கு இணையான பைரவர்கள்!!!

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் அந்த அருணாச்சலேஸ்வரரின் ஆணைப்படி இயக்கிவருவது காலதேவன் என்ற மஹாகால பைரவர் ஆவார்;
பெரும்பாலான பைரவ சன்னதிகள்,நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கும்;ஏன் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம்,பிற உலகங்கள்(கணபதி உலகம்,முருக உலகம்,இந்திர உலகம்,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,விஷ்ணு லோகம் என்ற திருப்பாற்கடல்,சித்தர்கள் உலகம்) அனைத்தின் இயக்கத்திற்கும் காரணமாக இருப்பது நடராஜரின் நடனமே ஆகும்;அந்த நடனத்தில் இருந்து காலத்தை நிர்ணயித்து,கால இயக்கத்தை நிர்வகித்து,அதன் சூட்சுமத்தின் படி மஹா கால பைரவர் இயக்கி வருகின்றார்;


108 தேய்பிறை அஷ்டமிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்பவர்களுக்கு ஜோதிட ஞானம் வளரும்;காலம் பற்றிய பல சூட்சும ரகசியங்களை உணரும் வரம் கிட்டும்;


எல்லா சிவாலயங்களிலும் இருக்கும் பைரவரை சேத்திர பாலர் என்று அழைப்பது வழக்கம்;சேத்திரம் என்றால் ஆலயம் என்று பெயர்;இன்னொரு அர்த்தமும்   உண்டு;சேத்திரம் என்றால்,அந்த சிவாலயத்தில் இருந்து குறிப்பிட்ட சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவை நிர்வாகிப்பவர் என்ற அர்த்தமும் உண்டு;


பின்வரும் ஊர்களில் வசிப்பவர்கள்,அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதிக்கு அடிக்கடி சென்று 1 மணி நேரம் வரை பைரவ ஜபம் செய்வது நன்று;

பைரவர் ஜபித்து வர தேவையான சுய கட்டுப்பாடு அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;பைரவ ஜபம் அவரது சன்னதிக்கு அருகில் அமர்ந்து இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;சிறிது தொலைவில் கூட அமர்ந்து கொள்ளலாம்;

கோவிலுக்குள் நுழைந்ததும்,நேராக பைரவர் சன்னதிக்குச் சென்று அவரை மட்டும் ஜபித்துவிட்டு திரும்புவது மாபெரும் தவறு.

 முறைப்படி ஒவ்வொரு சன்னதியையும்  வழிபட்டுவிட்டு, நிறைவாக,கால பைரவர் சன்னதிக்கு வர வேண்டும்;


யாருக்கெல்லாம் தமது கர்மவினைகளை அனுபவிக்காமலேயே தீர்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கின்றதோ,அவர் பைரவரை தனது முழு முதற் கடவுளாக மனதிற்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும்;இது உபாசனை அல்ல;பக்தி மார்க்க முயற்சி மட்டுமே!


தினமும் அல்லது சனிக்கிழமைகள் அல்லது பரணி நட்சத்திர நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை 1 மணி நேரம் ஜபித்து வருவது போதுமானது;கூடவே,தெரு நாய்களுக்கு அடிக்கடி உணவு தானம் செய்ய வேண்டும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை அல்லது ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்; வாரம் ஒரு நாள் வீதம் 1008 நாட்கள் ஜபித்து வருவதால்,பைரவருடைய அருளைப் பெற முடியும்;


காகபுஜண்டர் சித்தரின் அருளால் இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


1.அருள்மிகு ஏகாம்பர நாதர் திருக்கோவில்,காஞ்சிபுரம்

2.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்.காஞ்சிபுரம்

3.அருள்மிகு ஆட்சிபுரீஸ்வரர் திருக்கோவில்,அச்சிறுப்பாக்கம்;வழி:மேல்மருவத்தூர் அருகில்

4.அருள்மிகு பெரியநாயகி சமேத பழமலைநாதர் திருக்கோவில்,விருதாச்சலம்;

5.அருள்மிகு பெரிய நாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்,திருப்பாதிரிப்புலியூர்.

6.அருள்மிகு கடந்தை நாயகி சமேத சுடர்க்கொழுந்து நாதர் திருக்கோவில்,திருத்தூங்கானை மாடம்.
வழி:திட்டக்குடி டூ விருத்தாச்சலம் சாலை

7.அருள்மிகு ராமகிரி பைரவர்;
வழி:சென்னை டூ திருப்பதி சாலை(நாகலாபுரம் வழி) சுருட்டப்பள்ளி கடந்து நாகலாபுரத்தில் இருந்து 4 கி மீ தூரம்

8.அருள்மிகு மேற்றளீஸ்வரர் திருக்கோவில்,திரு மேற்றளத் தெரு,பிள்ளையார்பாளையம்.காஞ்சிபுரம்

9.அருள்மிகு அம்புஜாட்சி சமேத வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்,திருமாணிக்குழி
வழி:பண்ருட்டி டூ திருவந்திபுரம் சாலையில் சுந்தரர்பாடி- கெடில நதிப்பாலம் வழி

10.அருள்மிகு உண்ணாமலை சமேத அண்ணாமலையார் திருக்கோவில்,திரு அண்ணாமலை

11.அருள்மிகு ஆதி அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில்,திரு அண்ணாமலை கிரிவலப் பாதை(வாயுலிங்கம் கடந்ததும்)

12.சிதம்பரம்

13.அருள்மிகு சட்டைநாதர் திருக்கோவில்,சீர்காழி

14.அருள்மிகு பிரம்ம வித்யாநாயகி சமேத திருவெண்காட்டு நாதர்,திருவெண்காடு

15.ஆனந்த தாண்டவபுரம்(மாயவரம் அருகில்)

16.அருள்மிகு சிவலோக தியாகராஜசுவாமிகள் திருக்கோவில்,ஆச்சாள்புரம் அஞ்சல்,கொள்ளிடம்(வழி)சீர்காழி தாலுகா

17.அருள்மிகு அழகம்மை,தவக்கோலம்மை சமேத மனோக்கிய நாதசுவாமி திருக்கோவில்,திருநீலக்குடி,திருவிடைமருதூர் வட்டம்

18.அருள்மிகு தான் தோன்றீஸ்வரர் ஆலயம்,தான் தோன்றிமடம்,ஆக்கூர்.மயிலாடுதுறை வட்டம்.

19.அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோவில்,
கோவில் மாகாளம்,பூந்தோட்டம் அஞ்சல்,நன்னிலம் தாலுகா

20.அருள்மிகு விசித்தர பாலாம்பிகை சமேத குற்றம் பொறுத்த ஈஸ்வரர் திருக்கோவில்,தலை ஞாயிறு அஞ்சல்;
இளந்தோப்பு வழி;மயிலாடுதுறை.

21.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத சிவயோகி நாத சுவாமி திருக்கோவில்,திருவிசநல்லூர்.

22.அருள்மிகு அருமருந்து நாயகி சமேத கற்கடேஸ்வரர் திருக்கோவில்,திருந்துதேவன் குடி,திருவிசநல்லூர் அருகில்,கும்பகோணம் தாலுகா

23.அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை சமேத எழுத்தறிநாதர் திருக்கோவில்,இன்னம்பர்,
வழி:கும்பகோணம் டூ திருவையாறு சாலையில் திருப்புறம்பியம் வழிகாட்டியில் 3 கி மீ தொலைவு

24.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பூந்துருத்தி
வழி:தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருக்கண்டியூர் செல்லவேண்டும்;அங்கிருந்து 3 கி மீ

25.அருள்மிகு சிவகுகநாதர் திருக்கோவில்,சிவபுரம்,சாக்கோட்டை அஞ்சல்,கும்பகோணம்.

26.அருள்மிகு அமிர்தவல்லித் தாயார் சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,சாக்கோட்டை.கும்பகோணம் தாலுகா

27.அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோவில்,திருச்சேறை.

28.அருள்மிகு சித்தநாதேஸ்வர சுவாமி திருக்கோவில்,நாச்சியார் கோவில்.
வழி:கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 8 வது கி மீ

29.அருள்மிகு நேத்திராம்பிகை சமேத முக்திபுரீஸ்வரர் திருக்கோவில்,திருப்பயற்றூர்.
வழி:திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலை

30.அருள்மிகு உத்திராபதீஸ்வரர் திருக்கோவில்,திருச்செங்காட்டாங்குடி.
வழி:திருவாரூர் டூ திருமருகல் சாலையில் 1 கி மீ

31.அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்,திருமருகல்
வழி:திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலியில் நன்னிலம் கடக்கவும்;


32.அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சாத்தமங்கை
வழி:திருமருகல் டூ நாகூர் சாலையில் 1 கி மீ

33.அருள்மிகு நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில்,நாகப்பட்டிணம்

34.அருள்மிகு கமலாம்பிகை சமேத தியாகராஜசுவாமிகள் திருக்கோவில்,திருவாரூர்,

35.அருள்மிகு அமுதவல்லி சமேத பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்,திருக்களர்.திருவாரூர் மாவட்டம்.


36.அருள்மிகு நடனபாதேஸ்வரர் திருக்கோவில்,வடுவூர்
வழி:கடலூர் டூ பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பத்திற்கு வடமேற்கே 1 கி மீ

37.சேத்திரபாலபுரம்

38.அருள்மிகு தளிநாதர் திருக்கோவில்,திருப்பத்தூர்.


39.அருள்மிகு பெரியநாயகி சமேத ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோவில்,மாத்தூர்,காரைக்குடி அருகில்


40.அருள்மிகு சவுந்தர நாயகி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் திருக்கோவில்,இலுப்பைக்குடி


41.அருள்மிகு வடிவுடை அம்மை சமேத வளரொளிநாதர் திருக்கோவில்,வயிரவன் பட்டி.காரைக்குடி அருகில்


42.அருள்மிகு செண்பகாதேவி ஆலயம்,குற்றாலம்.தென்காசி மாவட்டம்.


43.அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோவில்,திருக்கோகர்ணம்
வழி:புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் 2 கி மீ


44.அருள்மிகு தான் தோன்றி நாதர் திருக்கோவில்,இடையாத்தூர் அஞ்சல்,புதுக்கோட்டை மாவட்டம்.


45.அருள்மிகு ஞானாம்பிகை சமேத பட்டீஸ்வரர் திருக்கோவில்,பட்டீஸ்வரம்.கும்பகோணம் தாலுகா.


46.அருள்மிகு பெரியநாயகி சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சக்தி முற்றம்.பட்டீஸ்வரம் அருகில்


47.அருள்மிகு பங்கஜவல்லி சமேத பசுபதீஸ்வரர் திருக்கோவில்,ஆவூர்,கும்பகோணம் அருகில்.

48.அருள்மிகு மறைக்காட்டீஸ்வரர் திருக்கோவில்,வேதாரண்யம்

49.அருள்மிகு கோளிலி நாதேஸ்வரர் திருக்கோவில்,திருக்குவளை.நாகை மாவட்டம்.



No comments:

Post a Comment