Saturday, October 1, 2016

சாரதா நவராத்திரியில் அன்னை அரசாலையின் அருளைப் பெறும் வழிமுறை

பிரபஞ்ச அன்னை அரசாலை(மஹாவராகி)யின் அருளைப் பெற விரும்புவோர் இந்த நவராத்திரி நாட்களில்(2.10.16 ஞாயிற்றுக்கிழமை முதல் 11.10.16 செவ்வாய்க்கிழமை வரை) தினமும் இரவு நேரத்தில் பின் வரும் பாடலை மனதுக்குள் ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

இங்கே தரப்பட்டிருக்கும் அன்னையின்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்;12 இன்ச் நீளம், 8 இன்ச் அகலத்திற்கு படமாக எடுத்து,பிரேம் அல்லது லேமினேஷன் செய்து கொள்ளவும்;

அன்னையின் படத்துக்கு அருகில் மாதுளம் பழம் அல்லது செவ்வாழைப்பழம் ஒன்றை தினமும் படையலாக வைக்கவும்;மறு நாள் காலையில் இதை எடுத்து சாப்பிடலாம்;வீட்டில் உள்ளவர்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்;

அசைவம்,மது இரண்டையும் தவிர்த்துவிட்டு,பச்சைத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு நெய் தீபம் வடக்கு நோக்கி ஏற்றி வைக்க வேண்டும்;இன்னொரு தீபத்தை இலுப்பை எண்ணெயால் ஏற்றி வைக்க வேண்டும்; இரு கைகளிலும் ஒரு ஐந்து முக ருத்ராட்சத்தை வைத்துக் கொள்ள வேண்டும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா என்று 9 முறை ஜபிக்க வேண்டும்;

பிறகு,பஞ்சமி,தண்டநாதா,சங்கேதா, சமேஸ்வரி,சமய சங்கேதா,வராகி,போத்ரிணி,சிவை,வார்த்தாளி, மஹாசேனா,ஆக்ஞாசக்ரேஸ்வரி,அரிக்நி என்ற 12 பெயர்களை முதல் 30 நிமிடங்கள் ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு,பின்வரும் பாடலை அடுத்த 30 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

ஐயும் கிலியும் எனத் தொண்டர்போற்ற அரிய பச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

குறிப்பு:இந்த பக்கத்தில் வரும் அன்னை வராகி பற்றிய பதிவுகளை தொடர்ந்து வாசித்து அதன் படி பின்பற்றி வருபவர்கள் இந்த 10 நாட்கள் மட்டும் இந்தபதிவின் படி மட்டும் பின்பற்றலாம்;11 ஆம் நாளில் இருந்து மீண்டும் பழைய படி ஜபத்தினைத் தொடரலாம்;

No comments:

Post a Comment